Close
நவம்பர் 22, 2024 5:25 மணி

வடகாட்டில் 47 அடி உயரமுள்ள வழுக்கு மரத்தை 7 பேர் ஏறி சாதனை..!

புதுக்கோட்டை

பவடகாட்டில் நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் போட்டியில் இலக்கை நோக்கி ஏறும் போட்டியில் முதல் பரிசு வென்ற பனங்குளம் கிங்க் பிஷர் அணியினர்.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் ஞாயிற்றுக்கிழமை  இரவு நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் போட்டியில் 47 அடி உயரமுள்ள வழுக்குமரத்தை 7 பேர் ஏறி சாதனை படைத்தனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘வடகாடு, மாங்காடு ஏ.வி. பேரவை’ சார்பில் வடகாட்டில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நேற்று முன்தினம் மாலை தொடங்கி இரவு வரை நடைபெற்றது.

இதில், புதுக்கோட்டை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 9 அணிகள் கலந்துகொண்டனர்.

தொடக்கத்தில் ஒவ்வொரு அணியில் இருந்தும் ஒருவர் மீது ஒருவராக 3 பேர் வீதம் வழுக்கு மரத்தில் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இலக்கை யாரும் தொடாததால் வீரர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது.

பின்னர்  நிலைமையைக் கருத்தில் கொண்டு  7 பேர் வீதம் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், பனங்குளம் கிங்க் பிஷர் எனும் அணியினர் 47 அடி உயரமுள்ள மரத்தின் உச்சி வரை லாவகமாக ஏறி வெற்றி பெற்றனர்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் நேற்று இரவு நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் போட்டியில் இலக்கை நோக்கி எறும் பனங்குளம் கிங்க் பிஷர் அணியினர்.

இது வரை நடைபெற்ற போட்டிகளில் இல்லாத அளவிற்கு, அதிக உயரமுள்ள மரத்தில் குறைந்த எண்ணிக்கையிலான வீரர்கள் ஏறி இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பதாக விழாக் குழுவினர் தெரிவித்தனர்.

வெற்றி பெற்ற அணியினருக்கு ரூ.15ஆயிரம் ரொக்கம், கோப்பை மற்றும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.

மேலும், கலந்து கொண்ட அனைத்து அணியினருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. சுமார் 5 மணி நேரம் விறு விறுப்பாக நடைபெற்ற இப்போட்டியை சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் அதிக உயரத்திலான வழக்கு மரம் ஏறும் போட்டியை வீர விளை யாட்டாக, தொடர்ந்து நடத்தி வருவது பாரம்பரிய விளையாட்டை அழியாமல் காப்பாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top