Close
செப்டம்பர் 20, 2024 3:45 காலை

புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் தொண்டைமானின் அரச முத்திரை- செப்பேடு: அருங்காட்சியகத்தில் ஆட்சியர் ஒப்படைப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை தொண்டைமான் அரச முத்திரை மற்றும் செப்பேட்டினை அரசு அருங்காட்சியகத்திடம் ஒப்படைத்த மாவட்ட ஆட்சியர்கவிதா ராமு

புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட  தொண்டைமான் மன்னரின் அரச முத்திரை மற்றும் செப்பேட்டினை மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு , புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்திடம் ஒப்படைத்தார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த, புதுக்கோட்டை தொண்டைமான் அரச முத்திரை மற்றும் செப்பேட்டினை, புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்திற்கு, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  வழங்கினார்.

புதுக்கோட்டை தொண்டைமான் அரச முத்திரையும், செப்பேடும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக பதிவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அரச முத்திரையானது சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதிலுள்ள ஓவியங்கள் பலகையின் மீது மூலிகைகளால் வரையப்பட்டுள்ளது.

செப்பேடு பொது ஆண்டு 1798 ஆம் ஆண்டைச் சேர்ந்தது. இதை அப்போது புதுக்கோட்டையை ஆண்ட விஜய ரகுநாத தொண்டைமான் மன்னர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு அகண்ட தீபம் என்ற விளக்கு ஏற்றுவதற்காக சிங்கத்தாகுறிச்சி என்ற கிராமத்திலுள்ள பெரியகுளத்து வயல் கோவிந்த தாஸ் என்ற வைஷ்ணவ பிராமணருக்கு நிலக்கொடை வழங்கியதற்காக கொடுக்கப்பட்ட செப்பேடாகும்.

இவைகளை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகக் காப்பாட்சி யரிடம் ஒப்படைத்தார். அருங்காட்சியகத்தில், தொண்டை மான் அரச முத்திரையும், செப்பேடும் விரைவில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இந்நிகழ்வில், புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் தி.பக்கிரிசாமி, மாவட்ட ஆட்சியரக தலைமை உதவியாளர் .செ.வெ.நாகநாதன், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத் தலைவர் மற்றும் கல்வெட்டாய்வாளர் கரு.இராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top