Close
செப்டம்பர் 20, 2024 5:41 காலை

விவசாய, விவசாயத் தொழிலாளர் விரோதமான ஒன்றிய பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம்

புதுக்கோட்டை

புதுகையில் எம்எல்ஏ சின்னதுரை தலைமையில் மத்திய அரசைக்கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயத்தொழிலாளர்கள்

ஒன்றிய பாஜக அரசின் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் கள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்து புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

போராட்த்திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ. தலைமை வகித்து பேசியதாவது:

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒன்றிய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை முழுக்க, முழுக்க மக்கள் விரோதமான அறிக்கையாக உள்ளது.

விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் மேலும், மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் பட்ஜெட்டாக இது உள்ளது. இந்தியப் பொருளாதாரத்தையே கேள்விக்குள்ளாக்கி உள்ள அதானியின் ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உட்படுத்த மோடி அரசுக்கு என்ன தயக்கம். 2002-ல் குஜராத்தில் அரங்கேற்றப்பட்ட வன்முறை வெறியாட் டங்களை அம்பலப்படுத்தும் பிபிசி தயாரித்துள்ள ஆவணப் படத்துக்கு ஏன் தடைவிதிக்க வேண்டும்.

புதுக்கோட்டை
மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளர்கள்

இதையெல்லாம் மூடிமறைத்து கார்பரேட்டுகளின் வேட்டைக் காடாக இந்தியாவின் இயற்கை வளத்தையும் பொருளாதாரத் தையும் மடைமாற்றும் வகையிலும், விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் விரோதமாக தயாரிக்கப் பட் டுள்ள ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை நகலை எரிக்கும் போராட்டம் முற்றிலும் நியாயம் என்றார் எம்எல்ஏ- சின்னதுரை.

போராட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன்,  தலைவர் எஸ்.பொன்னுச்சாமி, விதொச மாவட்டச் செயலாளர் டி.சலோமி, பொருளாளர் கே.சண்முகம், விதொச மாவட்டப் பொருளாளர் எம்.பாலசுந்தரமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் எம்.சண்முகம், கே.சித்திரைவேல், வே.வீரையா, ஜி.பன்னீர் செல்வம், ஆர்.சோலையப்பன், எஸ்.கலைச்செல்வன், எம்.ஜோஷிஉள்ளிட்ட ஏரானமானோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top