Close
செப்டம்பர் 20, 2024 3:42 காலை

புதுக்கோட்டையில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மூலம் 786 வழக்குகளில் ரூ. 16.81 கோடிக்கு தீர்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படி, புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் மக்கள் நீதிமன்றம் (லோக்அதாலத்)  11.02.2023- சனிக்கிழமை  நடைபெற்றது.

புதுக்கோட்டையில் நடைபெற்ற  மக்கள் நீதிமன்ற அமர்வுக்கு  தலைவர் / முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.அப்துல்காதர் தலைமை வகித்து  விசாரணையை தொடக்கி வைத்தார்.

மேலும், அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதை பொருள் தடுப்பு கூடுதல் மாவட்ட நீதிபதி பாபுலால், மாவட்டசட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்(பொ)/முதன்மை சார்பு நீதிபதி சி.சசிக்குமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் (எண்-1) ஜெயந்தி,

குற்றவியல் நீதித்துறை நடுவர் (எண்-2)  ஸ்ரீநாத், கூடுதல் மகிளா நீதிமன்ற நடுவர் ரேவதி, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா  ஆகிய நீதிபதிகள் கொண்ட மூன்று அமர்வுகள் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் 6 அமர்வுகள் என மொத்தம் 9 அமர்வுகளில் விசாரணை நடைபெற்றன.

நீதிமன்ற நிலுவையில் உள்ள உரிமையியல், குற்றவியல், வாகன விபத்து இழப்பீடு, செக் மோசடி மற்றும் வங்கி வராக் கடன் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் என மொத்தம் 786 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு சுமார் ரூ.16,81,37,664  தொகைக்கான சமரச தீர்வு  காணப்பட்டு  வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.

புதுக்கோட்டை
மக்கள் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்ற மக்கள்

லோக் அதாலத் (Lok Adalat) ஒரு அறிமுகம்…

லோக் அதாலத் என்று அழைக்கப்படும் மக்கள் நீதிமன்றம் அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் மூலம் மக்களின் பிரச்னைகளை தீர்க்க உதவுகிறது.மேலும் இந்த மக்கள் நீதிமன்றம் சமாதானநிலை மற்றும் சமரசம் மூலம்மக்களின் வழக்குகளை தீர்க்க நீதிதுறையால் உருவாக்கப்பட்ட நீதிமன்றமாகும்.

இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை எளிதில் தீர்வு காண வேண்டி மனுதாரர்களின் விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது தன்னிச்சையாகவோ சமரச முறையில் தீர்வு காண மக்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பலாம்.

இந்த மக்கள் நீதிமன்றம் மாற்றுமுறையில் சச்சரவுகளுக்கு தீர்வு காணும் ஒரு வழிமுறையாகும். லோக் என்பது மக்களையும்  அதாலத் என்பது நீதிமன்றத்தையும் குறிக்கும். மக்கள் நீதிமன்றம் என்ற எண்ணத்தினை முன்மொழிந்ததில் இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான பி.என்.பகவதி அவர்களுக்கு முதன்மையான பங்குண்டு.

குஜராத் மாநிலம், ஜூனகார் என்ற இடத்தில் மார்ச்- 14 – 1982  -ஆம் தேதி அன்று லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றமாக நடந்தது. சிலர் மக்கள் நீதிமன்றமும் லோக் அதாலத்தும் வேறு வேறு என மக்கள் நினைகிறார்கள் ஆனால் அது உண்மை இல்லை இரண்டும் ஓன்று தான்.மக்கள் நீதிமன்றம் உரிமையியல் விசாரணை முறைச் சட்டப்பிரிவு 89-ன் கீழ் நடைமுறையில் வருகின்றது.

நீதிதுறையால் உருவாக்கப்பட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு பிரிவு 19- தின் படி, மக்கள் நீதிமன்றம், 3 பேர் கொண்ட அமர்வாக இருக்கும்.அந்த அமர்வு ஒருவர் பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி மற்றொருவர் சமூக நலப் பணியாளர் அல்லது பொது நல ஊழியர் மூன்றாம் நபர் வழக்கறிஞர் அதாவது வழக்கிற்கு சம்பந்தமில்லாத வழக்கறிஞர்  இப்படி மூன்று பேர் கொண்ட நீதி ஆலோசனை வழங்குபவர்கள் அமர்ந்து, வழக்கு சம்பந்தப்பட்ட நபர்களை விசாரித்து அவர்கள் குறைகளை அறிந்து சமாதானம் செய்து வைப்பார்கள்.

மக்கள் நீதிமன்றம் மூலம் கோர்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் மட்டுமல்லாமல் கோர்ட்டுக்கு வர இருக்கும் தாவாக்களுக்கும் தீர்வு கண்டுவிடலாம். இங்கு தீர்வு காணப்பட்டால் அதற்கு மேல் மேல்முறையீட்டிற்குப் போக முடியாது.

தீர்க்கப்படும் வழக்கு வகைகள் பற்றி

சொத்து வழக்குகள் சிவில் வழக்குகள் காசோலை தொடர் பான வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், குடும்பப் பிரச்னைகள் தொடர்பான வழக்குகள், தொழில் தகராறுகள், தொழிலாளர் பிரச்னை தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகளில் சமாதானம் ஏற்படுத்திக் கொள்ளத் தன்மை யுள்ள வழக்குகள், நில ஆர்ஜிதம் மற்றும் இழப்பீடு தொடர் பான வழக்குகள், வங்கிக் கடன் பிரச்னைகள், வாடகை விவகாரங்கள், விற்பனை வரி, வருமான வரி மற்றும் மறைமுக வரி தொடர்பான பிரச்னைகள்.இது போன்ற வழக்குகள் தீர்த்து வைக்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top