Close
நவம்பர் 22, 2024 7:51 காலை

பொன்னமராவதியில் காவல்துறை- வங்கி அதிகாரிகள்- நகை வணிகர்கள் ஆலோசனைக்கூட்டம்

புதுக்கோட்டை

பொன்னமராவதியில் காவல்துறை சார்பில் டிஎஸ்பி.அப்துல்ரகுமான் தலைமையில் நடந்த வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி காவல் நிலையத்தில் வங்கி அதிகாரிகள், நகை அடகு கடை உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுடன் டிஎஸ்பி அப்துல் ரகுமான் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

கடந்த 12.02.2023 அன்று, திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு ஏடிஎம் மையங்களிலிருந்து பணம் திருடப்பட்டது தொடர்பாக அனைத்து வங்கிகளின் பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், படைத்தலைவர் முனைவர் செ. சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார்.

அதன் அடிப்படையில் பொன்னமராவதி காவல் நிலையத்தில் திருச்சி சரக காவல்துறைத் தலைவர் கார்த்திகேயன்  உத்தரவின்படி துணைத் தலைவர் சரவண சுந்தர்  அறிவுறுத்தலின்படி,
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே  ஆலோசனையின்படி பொன்னமராவதி காவல் நிலையத்தில் டிஎஸ்பி அப்துல் ரகுமான் தலைமையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சத்தியநாதன், காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் முன்னிலையில்  ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.

இதில்,  20 க்கும் மேற்பட்ட  வங்கிகளின்  மேலாளர்கள் மற்றும் பொறுப்பு, பாதுகாப்பு அதிகாரிகள், நகை அடகு கடை உரிமையாளர்கள், வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.

இதில் வங்கி மற்றும் ஏடிஎம்- மையங்களில் உள்ள பணத்தை கண்காணிக்க மறைமுக கேமராக்கள்  பொருத்தப்பட வேண்டும் என்றும், முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருள் அடங்கிய கேமராக்கள் அனைத்து ஏடிஎம்-களிலும் பொருத்தப்பட வேண்டும் என்றும், ஏடிஎம்-கள் உடைக்கப்படும் போது எச்சரிக்கை மணி அங்கே ஒலிக்கவும் மற்றும் அருகிலுள்ள காவல் நிலையங்களில் ஒலிக்க வழிவகை செய்ய வேண்டுமென்பது போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கைதடுப்புநடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி  காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

இதில்  வங்கி மேலாளர்கள், மற்றும் பொறுப்பு அதிகாரிகள், பாதுகாப்பு ஊழியர்கள்,  நகை அடகு கடை உரிமையாளர்கள், வர்த்தகர்கள் என 50 -க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top