தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய கருத்தரங்கம் பிள்ளைதண்ணீர்ப்பந்தல் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் 28.02.23 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் முத்துநாயகி தலைமை வகித்தார். நேரு யுவ கேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் ஜோயல் பிரபாகர் விழா நோக்கவுரை ஆற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் எல். பிரபாகரன் அறிவியல் தின சிறப்பரையாற்றினார்.
நேரு யுவ கேந்திரா திட்ட உதவி அலுவலர் ஆர். நமச்சிவாயம், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் எம். வீரமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
வானவில் மன்ற கருத்தாளர் பிரஹதாம்பாள் தேசிய அறிவியல் தின உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் அறிவியல் அறிஞர் சர்.சி.வி இராமன் வாழ்க்கை வரலாறு மற்றும் அறிவியல் சாதனைகள் குறித்து மாணவ மாணவியர் உரையாற்றினர். மேலும் மாணவர்களின் அறிவியல் செய்முறை விளக்கங்க ளும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழுவினர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் பள்ளி ஆசிரியர் மு. மாரியப்பன் வரவேற்றார். நிறைவாக நேரு யுவ கேந்திரா தேசிய இளையோர் தொண்டர் ஹரிஹரன் நன்றி கூறினார்.