Close
செப்டம்பர் 20, 2024 4:03 காலை

ஆட்டுக்கிடாய் முட்டு போட்டிக்காக கிடாய்களுக்கு தீவிர பயிற்சியளிக்கும் இளைஞர்கள்

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கிடாய் முட்டுப் பயிற்சி யளிக்கும் இளைஞர்கள்

ஜல்லிக்கட்டு போட்டிகளைப் போலவே ஆட்டுக்கிடாய் முட்டும் போட்டியும் தென் மாவட்டங்களில் பிரபலமாக நடத்தப்படும் போட்டியாகும்.

இந்தப்போட்டிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,கடந்த 2022 -ஆம் ஆண்டில் நீதிமன்றத்தின் அனுமதியுடன்  தென் மாவட்டங்களான சிவகங்கை, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கிடாய் முட்டும் போட்டி உற்சாகத்துடன் நடத்தப்பட்டது. அதே போல நிகழாண்டிலும் கிடாய் முட்டும் போட்டிகளை நடத்த  பல்வேறு அமைப்பினர் தயாராகி வருகின்றனர்.

கடந்த ஆண்டின் மார்ச் மாதம்  15 -ஆம் தேதி சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பொட்டப்பாளையம் மந்தையம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு  கிடாய் முட்டு நடந்தது.

மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாய் ஜோடிகள் கலந்துகொண்டன. இதில் அதிக முறை முட்டி எதிராக உள்ள கிடாயை வீழ்த்திய கிடாக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மோதலுக்கு 60 முட்டுக்கள் நிர்ணயிக்கப்பட்டன. அதற்குள் சோர்ந்துவிடும் கிடாய்கள் தோற்றதாக அறிவிக்கப்பட்டன. கிடாய்களின் பற்களின் எண்ணிக்கை அடிப்படையில்( 6, 8, 10) பிரிவுகள் நிர்ணயித்து போட்டிகள் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், நடப்பாண்டில் ஆட்டுக்கிடாய் முட்டு போட்டிகளை எதிர்பார்த்து திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தாங்கள் வளர்க்கும் ஆட்டுக்கிடாய்களுக்கு தீவிர பயிற்சியளித்து வருகின்றனர்.

திருப்புவனம் அருகே தி. அதிகரை கிராமத்தைச் சேர்ந்த கிடாய் வளர்த்து வரும் இளைஞர் த. ராமகிருஷ்ணன் கூறியதாவது:

கிடாய் முட்டுக்கு நீதிமன்றம்  தடை விதித்தது. 5 ஆண்டுகளுக்கு பிறகு  கடந்த  ஆண்டு  திருப்புவனம் அருகே பொட்டப்பாளையம் இளைஞர்கள் சங்கத்தினர் உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெற்று கிடாய் முட்டு போட்டியை நடத்தினர்.  பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டைப்  போல கிடாய் முட்டு போட்டிகளை தொடர்ந்து நடத்த தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top