Close
நவம்பர் 22, 2024 11:27 காலை

மார்ச் 3 -ல் புதுக்கோட்டை சமஸ்தான விடுதலையின் பவள விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் வல்லத்தரசுக்கு பாராட்டு விழா

விடுதலைக்கு போராடிய  புதுக்கோட்டையின் தந்தை புரட்சியாளர் வழக்குரைஞர் வல்லத்தரசு அவர்களுக்கு நன்றி பாராட்டும் விழா மற்றும் புதுக்கோட்டை சமஸ்தான விடுதலையின் 75 -ஆம் ஆண்டு விழா  கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ) மக்கள் விடுதலை சார்பில் வரும் 3.3.2023 -ஆம் தேதி  புதுக்கோட்டையில் நடைபெறுகிறது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலர் கசி. விடுதலைக்குமரன்  கூறியதாவது:

புதுக்கோட்டை

புதுக்கோட்டை  சமஸ்தான விடுதலை நாளை ஆண்டு தோறும் அரசு விழாவாகக் கொண்டா வேண்டும் என்ற வலியுறுத்தலுடன் சமஸ்தான விடுதலைக்கு போராடிய புதுக்கோட்டையின் தந்தை புரட்சியாளர் வழக்குரைஞர் வல்லத்தரசு அவர்களுக்கு  இந்த விழாவை எடுக்கிறோம். விழா, புதுக்கோட்டை பிருந்தாவனம் அருகிலுள்ள மீனாட்சி மஹாலில் நடைபெறுகிறது.

இதையொட்டி, மாலை 4.00 மணிக்கு ஓவியப்போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி நடைபெறும் (வயது வரம்பு இல்லை).

இதில் முதல் மூன்று இடங்களுக்கு தேர்வு செய்யப்படும் வெற்றியாளர்களுக்கு முறையே ரூ.3000, ரூ.2000, ரூ. 1000 ஆகிய மூன்று ரொக்கப்பரிசுகள் வழங்கப்படும்.

கவிதைப்போட்டி : 1×4 காப்பியர் தாளில், ஒரே பக்கத்தில் 20 வரிகளுக்குள் கணினியில்அச்சிட்டு கொண்டு வரவேண்டும்.  ஒவ்வொருவருக்கும் தலா 5 நிமிடம் தரப்படும்;

ஓவியப்போட்டி: 28×22 ஒயிட் சார்ட்டில் வாட்டர் கலரில் வரைந்து கொண்டு வந்துபார்வைக்கு வைக்க வேண்டும். பேச்சுப்போட்டி மற்றும் கவிதைப் போட்டிக்கு தலைப்பு “புதுக்கோட்டையின் தந்தை” புரட்சியாளர் வல்லத்தரசு

 ஓவியத்திற்கான கருத்துரு…

1. பிராமணர் அல்லாத முதல் வழக்கறிஞரான, புதுக்கோட்டையின் தந்தை வல்லத்தரசு நீதிமன்ற முகப்பின் முன் நிற்பது போன்ற காட்சி

2. மன்னரின் வரி உயர்வுக்கு எதிராக நகர்மன்றத்தில் பேட்டையார்கள் (வியாபாரிகள் கூட்டத்தில் கிளர்ச்சி உரையாற்றிய காட்சி-

3.பிரிட்டிஷாருக்கு எதிராக திலகர் திடலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் எழுச்சி உரையாற்றிய காட்சி-

4. சுதந்திர நாளில் தடையை மீறி தம் வீட்டின் மாடியில் கொடி ஏற்றி கூடியிருந்த மக்கள் கடலின்முன் வீர உரை நிகழ்த்திய காட்சி. இப்போட்டிகள் தொடர்பான விவரங்களுக்கு  90957 10639 – 94456 35963 – 97864 41042 -ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

இந்த விழாவில் பின்வரும் தீர்மானங்களை  ஒன்றிய அரசுக்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கையாக வைக்க இருக்கிறோம்.

தமிழ்ச் சமூக வரலாற்றில் ஒரே நேரத்தில், பிரிட்டிஷாருக்கு எதிராகவும், மன்னர் ஆட்சிக்கு எதிராகவும் போராடிய ஒரே தலைவரான வல்லத்தரசுவின் வாழ்க்கையை அனைத்து நிலை மாணவர்களுக்கும்  பாடமாக்க வேண்டும். வல்லத்தரசு பிறந்த நாளைஅரசு விழாவாக கொண்டாட வேண்டும்,

புதுக்கோட்டையின் தந்தை வல்லத்தரசுவுக்கு புதுக்கோட்டையில் மணிமண்டபம் கட்ட வேண்டும்.

பிராமணரல்லாத முதல் வழக்கறிஞரான வல்லத்தரசுவுக்கு நீதிமன்ற வளாகத்தில்முழு உருவச்சிலை அமைக்க வேண்டும்.

புரட்சியாளர் வல்லத்தரசு வாழ்ந்த தெற்கு 4-ஆம் வீதிக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும்.

புதுக்கோட்டை நகர வடக்கு நுழைவு வாயிலில் புதுக்கோட்டையின் தந்தைக்கு நினைவு வளைவு கட்ட வேண்டும்.

புதுக்கோட்டையின் தந்தை வல்லத்தரசு பிறந்த ஊரான கொப்பம்பட்டியில் நினைவிடம் கட்ட வேண்டும்.

வடிவமைக்கப்பட்ட பின்னரும் கிடப்பில் போடப்பட்டுள்ள சுதந்திர போராட்ட தியாகி வல்லத்தரசு அஞ்சல் தலையை (Postal Stamp) உடனே வெளியிட வேண்டும்.இவ்வாறு தெரிவித்தார் கசி. விடுதலைக்குமரன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top