Close
நவம்பர் 21, 2024 10:11 மணி

ரயில் பெட்டிகளில் உள்ள மஞ்சள் கோடுகளின் மர்மம் என்ன…

தமிழ்நாடு

முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியின் அடையாளம்

ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளை சுலபமாக கண்டறிய ஆரம்ப காலம் முதலே வழி வகை செய்யப்பட்டிருப்பது நம் அனைவருக்கும் தெரியுமா என்பது கேள்விக்குறிதான்.

இந்திய இரயில்வே (Indian Railways) இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இது உலகிலுள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றாகும். இந்திய இரயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர்; ஆண்டுக்கு 35 கோடி டன் சரக்கானது இடம் பெயர்க்கப்படுகிறது; 12.54 இலட்சம் பணியாளர்கள் இதில் பணிபுரிகின்றனர்.

இந்தியாவிலுள்ள இருப்புப் பாதையின் மொத்த நீளம் 67,956 கிலோ மீட்டர்களாகும். இது தினமும் 14,444 தொடருந்துகளை இயக்குகிறது. தொடர்வண்டி, 1853-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1947-ல் இந்தியச் சுதந்திரத்தின் போது மொத்தம் 42 தொடர்வண்டி அமைப்புகள் இருந்தன. 1951-ல் அவை தேசியமயமாக்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்ட போது, உலகின் மிகப்பெரிய வலையமைப்புகளில் ஒன்றாக உருவானது. இந்திய இரயில்வேயால் தொலைதூர இரயில்கள், புறநகர் இரயில்கள் ஆகிய இரண்டுமே இயக்கப்படுகின்றன.

இந்தியாவில் 1853-ம் ஆண்டு தான் ரயில்வே சேவை துவங்கப்பட்டது. பின்பு இந்த ரயில் சேவை 1951-ம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது. அன்று முதல் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. அப்படி ஒருநாள் வந்த இந்த மாற்றம் தான் மஞ்சள் நிற கோடுகள். பொதுவாக ரயிலில் பயணித்திருப்பவர்களுக்குக் கூட ரயிலில் உள்ள சின்ன சின்ன விஷயங்கள், அல்லது குறியீடுகளை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும்.

அப்படியான ஒருவிஷயம்தான் ரயில் பெட்டிகளில் கடைசியில் ஜன்னலுக்கு மேல் உள்ள மஞ்சள் நிற கோடுகள், இந்த கோடுகள் எதைக் குறிக்கிறது என்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை எனக் கூறலாம்.

இந்தியாவில் விரைவுவண்டி சூப்பர் பாஸ்ட் ரயில்கள் எல்லாம் நீல நிறத்தில் ரயில் பெட்டிகளை கொண்டிருக்கும். பெரும்பாலான பெட்டிகள் முன்பதிவு பெட்டிகளாக இருக்கும். ஒரு சில பெட்டிகள் மட்டுமே முன்பதிவில்லா பெட்டிகளாக இருக்கும்.

இந்த நீலநிற பெட்டியில் உள்ள நான்கு முனைகளில் உள்ள கடைசி ஜன்னலுக்கு மேல் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் இருக்கும். இந்த கோடுகள் இருந்தால் அந்த பெட்டிகள் முன் பதிவு இல்லாத பெட்டிகள் என அர்த்தம், முன்பதிவு உள்ள பெட்டிகளில் இந்த கோடுகள் இருக்காது. எனவே ரயில்வே நிலையத்தில் பயணிகள் முன்பதிவில்லாத பெட்டியை எளிதாக கண்டுபிடிக்கவே இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top