Close
செப்டம்பர் 20, 2024 6:32 காலை

ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகையாளர்களை இந்த அரசு  பாதுகாக்கும்: அமைச்சர் மு.பெ. சாமிநாதன்

மதுரை

மதுரை காமராஜர் பல்கலை.யில் நடந்த குறும்பட விழாவில் பரிசளித்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒரு தூணான பத்திரிகையாளர்களை இந்த அரசு  பாதுகாக்கும் என்றார் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற 14-ஆவது ப்ரக்கிரிதி சர்வதேச ஆவண திரைப்பட நிறைவு மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது .

இந்த நிகழ்வை, தேசிய கல்வி தொடர்பான கூட்டமைப்பு மற்றும் கல்வி பல் ஊடக ஆய்வு மையம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய விழாவானது, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் அரங்கில் நடைபெற்றது.

இதில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் பங்கேற்று , சிறந்த ஆவண படங்களுக்கு பரிசுகள் மற்றும் காசோலைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம்  அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:  சென்னையில் அப்துல் கலாம் மற்றும் ரவீந்திரநாத் தாகூர் அவர்களுக்கு சிலைகள் அமைக்க முதல்வர் ஒப்புதல் கொடுத்துள்ளார். அதன்படி, விரைவில் இரு தலைவர்களின் சிலைகள் சென்னையில் அமைக்கப்பட உள்ளன மற்றும் சென்னை சுற்றியுள்ள சேதமடைந்த சிலைகளை சரி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய தலைவர்களின் மணிமண்டபங்கள் அந்த மணி மண்டபங்கள் தலைவர்கள் பிறந்த நாள், நினைவு நாள் மட்டுமே பயன்படுகிறது. அந்த ஒரு நாட்களுக்கு மட்டும் பயன்படாமல் மற்ற அரசு விழாக்களுக்கும் மற்றும் பொதுமக்களின் சுப காரியங்களுக்கும் பயன்படுத்தும் வகையில் அமைய உள்ளது. இதனால், தேசிய தலைவர்களின் பெயர்கள் அந்த ஒரு நாட்களுக்கு மட்டும் பயன்படாமல் இப்படி விழாக்கள் நடத்துவது மூலமாக அவர்கள் பெயர் நாள்தோறும் நம் நினைவில் இருக்கும்.

தமிழ்நாடு முதலமைச்சரால் பத்திரிகையாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நல வாரியத்தின் பயன்கள் பத்திரிகையாளர் மட்டுமில்லாமல் அவர்களது  குடும்பத்திற்கும் பயன் கிடைக்கும் .

செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க செல்லும் போது தொடர்ந்து தாக்கப்படுகின்றனர் குறித்த கேள்விக்கு, அரசு கவனத்திற்கு வரக்கூடிய சம்பவங்களை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒரு தூணான பத்திரிகை யாளர்களை இந்த அரசு  பாதுகாக்கும்.

ஈரோடு இடைத்தேர்தலில் பணநாயகம் தான் ஜெயித்தது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்த கேள்விக்கு, தோல்வியுற்றவர்கள் சொல்லும் கதை குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஓட்டல என்ற கதையைத்தான் நினைவூட்டுகிறது.

கலைஞரின் பேனா சிலை தொடர்ந்து சர்ச்சை எழுப்பி கொண்டிருக்கிறார்கள். அது குறித்த கேள்விக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தை அரசு நிதியில் வைத்திருக் கின்றனர்.

இது குறித்து யாரும் பேசுவது இல்லை. ஆனால், பேனா சின்னத்தை மட்டும் குறை கூறுகிறார்கள். பேனா என்பது பொதுவானது அது கட்சியின் சின்னம் கிடையாது. ஆனால், இரட்டை இலை கட்சியின் சின்னம் என்றார் அமைச்சர் மு.பெ. சாமிநாதன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top