Close
நவம்பர் 22, 2024 5:33 காலை

ஆம்னி பேருந்து ஓட்டுனர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

சென்னை

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் சங்கத்தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற மருத்துவ முகாம்

சென்னை, கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில்  06.03.2023 அன்று ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தலைவர் அ . அன்பழகன் தொடக்கி வைத்தார்.

இதில் 300 -க்கும் மேற்பட்ட  ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர். இது கலந்து கொண்ட  ஓட்டுனர்களுக்கு  விஜயா  மருத்துவ மனை மருத்துவக்குழுவினர் பொது மருத்துவ பரிசோதனை  மேற்கொண்டனர்.

சென்னை
ஓட்டுனர்களுக்கு டிராவல் பேக் வழங்கும் நிர்வாகிகள்

இதைத்தொடர்ந்து, இந்தியா விஷன் சார்பாக கண் பரிசோதனை நடைபெற்றது. இதில் பரிசோதனை செய்யப்பட்ட  150 -க்கும் மேற்பட்ட ஓட்டுனர்களுக்கு  கண் கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டது.  மேலும் இம்முகாமில்  கலந்து கொண்ட ஓட்டுனர்கள் அனைவருக்கும்  மதிய உணவு மற்றும் டிராவல் பேக் வழங்கப்பட்டது.

.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top