Close
நவம்பர் 22, 2024 10:04 காலை

நுகர் பொருள் வாணிபக் கழக தனியார் மய நடவடிக்கைகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

தஞ்சை கரந்தை நெல் கொள்முதல் நிலையத்தில் அனைத்து தொழில் சங்கங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

நுகர் பொருள் வாணிபக் கழக தனியார் மய நடவடிக்கை களை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 1000 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் தனியார் மய நடவடிக்கைகள், சுமைப்பணி டெண்டர் விடுதல்,கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்கம் செய்யப்படுவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் செயல்படும் ஏஐடியூசி, சிஐடியு, ஐஎன்டியூசி, ஏஐசிசிடியூ, எஸ்சிஎஸ்டி அம்பேத்கர் சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில்,  தஞ்சாவூரில் கரந்தை நெல் கொள்முதல் நிலையம் முன்பு இன்று மதியம் ஒரு மணிக்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நுகர் பொருள் வாணிபக் கழக ஏ ஐ டி யூ சி தொழிலாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் தி.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சி.சந்திரகுமார் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.

நுகர் பொருள் வாணிப கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கண்டித்தும், கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனுக்குடன் கிடங்குகளுக்கு  அனுப்பி வைக்க வேண்டும். எடை இழப்பை பணியாளர்கள் மீது சுமத்துவதை கைவிட வேண்டும். சுமை பணி, துப்புரவு பணிகளில் தனியார் டெண்டர் முறைகளை கைவிட வேண்டும்.  நவீன அரிசி ஆலைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும்.

ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மாத கருணை ஓய்வூதியும் ரூபாய் 4000  ம் வழங்க வேண்டும்.  நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன  உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்து கொள்முதல் நிலையங்கள், கிடங்குகள், சேமிப்பு நிலையங்கள், நவீன ஆலைகள் முன்பு  (மார்ச்- 9 ) மதியம் ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியூசி மாநிலச் செயலாளர் ஆர்.தில்லைவனம், மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன்,. சங்க நிர்வாகிகள் எஸ்.தியாகராஜன், எஸ்.செல்வம், எஸ்.ஞானசேகரன், மேஸ்திரி ஆறுமுகம் ஆர்.சந்தான கிருஷ்ணன் மற்றும்  ஏராளமான சுமைத் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top