Close
செப்டம்பர் 19, 2024 11:07 மணி

புதுக்கோட்டை அரசு கேகேசி கல்லூரி பேராசிரியர் அவமானப்படுத்தப்பட்ட விவகாரத்தில் முதலமைச்சர் தலையிடக்கோரி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை அரசு கேகேசி கல்லூரி பேராசிரியர் அவமா னப்படுத்தப்பட்ட விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் தலை யிடக்கோரி மத்திய, மாநில  SC/ST அரசு ஊழியர்கள்- மக்கள் கூட்டமைப்பினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் காயத்திரி தேவிக்கு,  எதிராக சாதி ரீதியாக அடக்குமுறைகளைக் கையாளும் கல்லூரி முதல்வர் பா. புவனேஸ்வரியை, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி கைது செய்து பணி நீக்கம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக முதல்வர் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  புதுக்கோட்டையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி உதவி பேராசிரியர்  காயத்திரி தேவிக்கு,  எதிராக சாதி ரீதியாக அடக்கு முறைகளைக் கையாளும் கல்லூரி முதல்வர்,  பா. புவனேஸ்வரியை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி கைது செய்து பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும்
கல்லூரி முதல்வர்  பா. புவனேஸ்வரி, தனது கணவர், எஸ். இராமநாதனை வரச்சொல்லி பட்டியலின  பேராசிரியர் காயத்திரிதேவியை கல்லூரி வளாகத்திலேயே ஒருமையில் பேசி சாதியைச்சொல்லி இழிவுபடுத்தி கெட்ட வார்த்தைகளால் திட்ட வைத்துள்ள, கல்லூரி முதல்வரையும் அவரது கணவரையும்  வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் படி கைது செய்ய வலியுறுத்தியும்
திருச்சி பாரதிதாசன் பல்கலை கழகத்தில் பணிபுரியும் பட்டியல் பழங்குடி இன பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களை சாதிய வன்மத்தோடு அரசு விதிகளுக்கு எதிராக பட்டியலின பணியாளர்களை விட இளையவர்களை பிரிவு தலைவராக பதவி உயர்வு வழங்கி வருவதும், பல்கலை கழகத்தில் படித்துவரும் பட்டியல் பழங்குடியின மாணவர்களுக்கு அரசின் உதவிகளை உரிய காலத்தில் வழங்காமல் காலங்கடத்தி வரும் பல்கலை கழக துணை வேந்தரை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தியும்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்களின் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்து  அசுத்தம் செய்து எமது மக்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த கயவர்களை இதுவரை கைது செய்யாத மர்மம் என்ன? உண்மைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும்.
பட்டியல் பழங்குடி மக்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டப்படி அரசு வேலைவாய்ப்புகளில் இன்றைய மக்கள் தொகை உயர்வுக்கு ஏற்ப 27 %  உயர்த்தி கொடுத்திருக்க வேண்டும். ஆனால் 19 %  கூட சரியாக நடைமுறைப்படுத்த வில்லை என நீதிமன்றமே (WP25062/2012) நாள்:18.07.2014 தீர்ப்பின்படி 27614 இடங்கள் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என 18.07.2014 -ல் தீர்ப்பு கூறியும் இதுவரை  நடைமுறைப்படுத்த வில்லை. உடனடியாக சிறப்புத் தேர்வு நடத்தி பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும்
அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக கூட்டுறவு சங்க தலைவர் தேர்தலில் இடஒதுக்கீடை நடைமுறைப்படுத்தாமல் இதுவரை தேர்தல் நடத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் கூட்டுறவு சங்க தலைவர் தேர்தலில் இடஒதுக்கீடை நடைமுறைப்படுத்தி தேர்தல் நடத்த வலியுறுதியும்.
தமிழகம் முழுவதும் பிறசமூகத்தினர் பட்டியல் பழங்குடியின போலிச் சாதிச்சான்றிழ் பெற்று அரசுத்துறை இரயில்வே மற்றும் வங்கிகளில் பல ஆயிரக்கணக்கானவர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என தெரிய வருகிறது. உடனடியாக ஆய்வு செய்து போலிச் சாதிச்சான்றிதழ் பெற்று பணிபுரியும் பிற சமூகத்தினரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி யும்.
ஏற்கெனவே நீதிமன்றம் 4.11.2022 -ல் மருத்துவர் தோ.இராஜேந்திரன் மற்றும் தஞ்சை மாவட்டம், பாரிவள்ளல் பிரபாகர் மகேந்திரன் அவருடன் 4 நபர்கள் போலிச் சாதிச் சான்றிதழ் பெற்று பணிபுரிந்து வருவது தவறு என நீதிமன்றமே தீர்ப்புக்கூறியும் இதுவரை அவர்களை கைது செய்யாத மர்மம் என்ன? உடனடியாக அவர்களை கைது செய்து,அவர்களுடைய சொத்துக்களை தமிழக அரசு பறிமுதல் செய்ய வலியுறுத்தியும்.
1892 -ல் வெள்ளையர்கள் பட்டியல் பழங்குடி மக்களுக்கு வழங்கிய 12 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட உபரிநிலங்களை (பஞ்சமி) போலி பட்டா தயாரித்து கொள்ளையடித்த நபர்களிடமிருந்து இதுவரை மீட்டுக் கொடுக்காத மர்மம் என்ன? குழு போடப்பட்டுள்ளது என காலங்கடத்தாமல் 1989 -ஆம் ஆண்டு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நடை முறைப்படுத்தி உடனடியாக எங்களுக்கு நிலங்களை மீட்டுக் கொடுக்க வலியுறுத்தி, மத்திய, மாநில  SC/ST அரசு ஊழியர் கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு People Federation, (The Social Justice, Secularism and People’s Democracy)  சார்பில் கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மத்திய, மாநில SC/ST அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பினர்
புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற கவனஈர்ப்பு  ஆர்ப்பாட்டத்துக்கு நிறுவனர்/ மாநிலத்தலைவர் தலைமை  எஸ்.கருப்பையா தலைமை வகித்தார்.மாநில செய்தி மாநில செய்தியாளர் தேனி ஜெ.மாதவன் முன்னிலை வகித்தார்.
ராஜா, முள்ளூர் தியாகு,  செல்வம்,  புரட்சிபாரதம்
பாலசுப்பிரமணியன்,  பழனிச்சாமி,  அ. சோலைமலை,
செல்வன். ஆசிரியர் முருகேசன்,பொன்னுச்சாமி, ரமேஷ்,
நடராஜன், சின்னப்பன், சுந்தரம், காரல் மார்க்ஸ்,
தங்கதமிழழகன், இளங்கோ, மணிமாறன், முத்துக்குமார்,
இராமர், பாலச்சந்திரன், மகேந்திரன், சிவாஜிராஜா,
சசிகலா, சந்திரன்,  சண்முகம், த.அன்பழகன், மகேஷ் குமார்,சேகர், அரசப்பன், விஜயன், இளமான்சேகர்,
சூரியன், வே.செல்வகுமார், அன்னகாமாட்சி. மாரியம்மாள் மகேஸ்வரி இளங்கோ,ருக்மணி,  பாலசரவணன்,
சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top