புதுக்கோட்டையைச் சேர்ந்த தன்னார்வலர்கள், இந்திய ரெட்கிராஸ் சங்கம், பேக்கரி மகராஜ், ராஜா கன்ஸ்ட்ரக் ஷன்ஸ், ஆதவன் என்டர்பிரைசஸ், சிட்டி ரோட்டரி சங்கம், பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம், கட்டிட பொறியாளர்கள் சங்கம் மற்றும் மரம் நண்பர்கள் இணைந்து நடத்திய உலக மகளிர் தின விழாவில் நகராட்சி “பெண் சுகாதாரப் பணியாளர்களை” பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை மேலராஜவீதி, சில்வர் ஹாலில் நடைபெற்ற விழாவிற்கு இந்திய ரெட்கிராஸ் சங்க புதுக்கோட்டை கிளை தலைவர் மருத்துவர் ராம்தாஸ் தலைமை வகித்தார்.
விழாவில் திருந்திய நெல் சாகுபடிக்காக தமிழக அரசின் விருது பெற்ற வசந்தா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நகராட்சி பெண் சுகாதாரப் பணியாளர்களைப் பாராட்டி, நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
புதுக்கோட்டை நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத் அலி, ரெட்கிராஸ் கௌரவ செயலர் ராஜாமுகமது, தொழிலதிபர் சேவியர், திருக்குறள் கழக தலைவர் ராமையா, இளங்கோவ டிகள் இலக்கிய மன்ற பொருளாளர் சத்தியராம் ராமுக்கண்ணு, ரோட்டரி மேனாள் ஆளுனர் அ.லெ.சொக்கலிங்கம்.
பாரதவிலாஸ் கிருஷ்ணமூர்த்தி, மரம் நண்பர்கள் செயலர் பழனியப்பா கண்ணன், நகர்மன்ற உறுப்பினர் மூர்த்தி, கட்டிட பொறியாளர்கள் சங்க தலைவர் கண்ணன், பேராசிரியர் அண்ணாமலை ஆகியோர், நகர் மக்களின் நலனுக்காக உழைக்கும் பெண் சுகாதாரப் பணியாளர்களை பாராட்டி வாழ்த்திப் பேசினர்.
முன்னதாக நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சா.விஸ்வநாதன் வரவேற்புரை ஆற்றினார். நிறைவாக மரம் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ரியாஸ் கான் நன்றி கூறினார்.
விழாவில் நகராட்சி பெண் அலுவலர்கள் மற்றும் ஏராளமான சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். அனைத்து பெண் சுகாதாரப் பணியாளருக்கும் நினைவுப் பரிசாக குத்து விளக்கு மற்றும் ரெட்கிராசின் சுகாதாரப் பெட்டகமும் வழங்கப்பட்டது.