சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அதற்கு முந்தைய 100 நாட்கள் விழாவாக “யோகாஉற்சவ் 2023” என்ற பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது
அதன் ஒரு பகுதியாக மெராஜ் தேசாய் தேசிய யோகா மையம்
ஆயுஷ் அமைப்பால் அதன் 89-ஆம் நாள் நிகழ்வாக 24-03-2023 அன்று காலை 7 மணி முதல் 1 மணி வரை யோகா பயிற்சியும், கருத்தரங்கமும் புதுக்கோட்டை ஆனந்த யோகா பவுண்டேசன் சார்பில் லெனாவிலக்கு செந்தூரான் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
ஒவ்வொரு நாளும் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியில் தினமும் 100 நாட்கள் நடைபெற்றுள்ளது. இதில் இந்தியன் யோகா அமைப்பின் தமிழக செயலர் டாக்டர் இளங்கோவன், நீதிபதி பிச்சை, சிறைத்துறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி.
டாக்டர் சந்திரசேகர், நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், செந்தூரான் கல்வி குழுமம் தலைவர் எம்.செல்வராஜ், கல்லூரி முதன்மை செயல் அலுவலர் எஸ். கார்த்திக், ஆனந்தயோகா பவுண்டேசன் நிர்வாகி செல்வராஜ், ராஜராஜேஸ்வரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த ஆண்டின் தமிழகத்தின் முதல் நிகழ்ச்சியாக இது நடைபெற்றுள்ளது. முன்னதாகக காலை 7.00 – 8.00 மணிவரை நடைபெற்ற நிகழ்ச்சியில் 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை, ஆனந்த யோகா அமைப்பின், தீபக் சந்தான கிருஷ்ணன், செல்வ ரெத்னம், முத்துச்சாமி, சண்முகம் ராஜா ஆகியோர் செய்தனர்.