Close
நவம்பர் 22, 2024 6:13 காலை

செறிவூட்டப்பட்ட அரிசியை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்: ஆட்சியர்

புதுக்கோட்டை

செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரித்த உணவு பொருகள்களை அறிமுகப்படடுத்திய ஆட்சியர் கவிதாராமு

செறிவூட்டப்பட்ட அரிசியை சாப்பிட்டு  ஆரோக்கியமாக வாழலாம் என்றார் புதுக்கோட்டைமாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், கூட்டுறவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (03.04.2023) நடத்தப்பட்ட   கண்காட்சி அரங்கினை பார்வையிட்டு, செறிவூட்டப்பட்ட அரிசியின் மூலம் தயார் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:

தமிழக அரசு நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப் படும் அரசிகளில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்பட வுள்ளதை முன்னிட்டு, செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தற்போது செறிவூட்டப்பட்ட அரிசியில் இருந்து சமைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு, அதன் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப் பட்டது.

அரிசி செறிவூட்டுதல் 2 கட்டங்களாக மேற்கொள்ளப்படுகிறது. மாவாக அரைக்கப்பட்ட அரிசியில் தாதுக்கள், வைட்டமின்கள் சேர்க்கப்பட்டு அரிசி குறுணைகளாக உருவாக்கப்படுகிறது. இவ்வாறு குறுணைகளாக உருவாக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசி சாதாரண அரிசியுடன் 1:100 என்ற விகிதத்தில் (1 மெட்ரிக் டன் செறிவூட்டப்பட்ட அரிசி குறுணைகள் 100 மெட்ரிக் டன் அரிசியுடன் கலந்து, 100 மெட்ரிக் டன் சமமான செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்படுகிறது) இவ்வாறாக தயாரிக்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி பைகளில் அடைக் கப்பட்டு, உணவு சமைப்பதற்காக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இந்த செறிவூட்டப்பட்ட அரிசி அதே சுவை, அதே தோற்றம், அதே சமையல் முறையில் சமைக்கலாம். இதில் உள்ள இரும்பு சத்து மூலம் இரத்த சோகையினை தடுக்கலாம். போலிக்அ மிலம் மூலம் கருவளர்ச்சிக்கும், இரத்த உற்பத்திக்கும் உதவு கிறது. வைட்டமின் பி-12 மூலம் நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது.

எனவே பொதுமக்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு தமிழக அரசால் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியினை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப் பிரியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.இராஜேந்திர பிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், துணைப் பதிவாளர் (பொ.வி.தி.) கோபால் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top