Close
நவம்பர் 22, 2024 12:14 காலை

இன்றுடன் நிறைவுபெற்றது பிளஸ் 2 தேர்வுகள்.. நெகிழ்ச்சியுடன் மாணவர்கள் பிரியாவிடை

புதுக்கோட்டை

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று நிறைவடைந்தது

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் (ஏப்.3) நிறைவு பெற்றது. பள்ளி பருவத்தை முடித்த உற்சாகத்தில் மாணவர்கள் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 13 -ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யில் இருந்து பள்ளி மாணவர்கள் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேரும், தனித்தேர்வர்கள் 23 ஆயிரத்து 747 பேரும் எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில்  பிளஸ் 2 தேர்வினை 10,690 மாணவர்கள்,  11,041 மாணவிகள் என மொத்தம் 21,731  பேர் எழுதுகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேல்நிலை வகுப்பிற்கு 97 தேர்வு மையங்களும்,11 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும்,2 விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களும், 25 வழித்தடங்களும், தனித்தேர்வர்களுக்கு 2 தேர்வு மையங்களும் அமைக்கப் பட்டிருந்தன.

பிளஸ் 2 பொதுத் தேர்வு (ஏப்.3-திங்கள்கிழமை) இன்றுடன் நிறைவு பெற்றது. கடைசி நாளான வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வை மாணவர்கள் எழுதினர்.

இவர்களில் மொழிப் பாடங்களில் மட்டும் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்வை எழுதாத மாணவர்களை அடையாளம் கண்டு, அவர் களை துணைத்தேர்வில் பங்கேற்க வைக்க கல்வித்துறை அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இன்றுடன் பள்ளி வாழ்க்கையை பிளஸ் 2 மாணவர்கள் நிறைவு செய்தனர். மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிந்து, தேர்வு அறையிலிருந்து வெளியே வந்த மாணவர்கள்  பொதுத் தேர்வு நிறைவு அடைந்ததை  உற்சாகத்துடன் நடனமாடிக் கொண்டாடினர்.

மாணவிகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகை யில் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவினர். மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர்  ஆடையில் மை தெளித்து மகிழ்ச்சியை வெளிப்ப டுத்தினர். மேலும் ஒருவருக்கு ஒருவர்  கண்ணீருடன்  பிரியா விடை பெற்றனர்.

பள்ளி வளாகத்தை விட்டு வெளியே வந்த மாணவர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் கேக் வெட்டி கொண்டாடி,செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் அவர்களில் சிலர் உணவகங்களுக்கு சென்று மதிய உணவை முடித்தவிட்டு, மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். பல்வேறு பள்ளிகளில் இன்று மாலை பிரிவு உபசார நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிளஸ் 2 தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 10 -ஆம் தேதி தொடங்கி 21 -ஆம்  தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பணியில் சுமார் 48 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்வு முடிவுகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி அடுத்த மாதம் மே-5 -ஆம் தேதி வெளியிடப்பட இருப்பதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு
பள்ளிக்கல்வித்துறை இயக்ககம்

இதேபோல் கடந்த மாதம் 14 -ஆம்  தேதி தொடங்கிய பிளஸ் 1 பொதுத்தேர்வு 5 -ஆம் தேதி முடிவடைகிறது. இந்த தேர்வை பள்ளி மாணவர்கள் 7 லட்சத்து 88 ஆயிரம் பேரும், தனித்தேர் வர்கள் 5 ஆயிரத்து 300 பேரும் எழுதுகின்றனர். நாளை மறுதினம் கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயி ரியல் உள்பட 9 பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது.

இவர்களைத் தொடர்ந்து எஸ்எஸ்எல்சி மாணவ- மாணவி களுக்கான பொதுத்தேர்வு வருகிற 6.4.2023 -ஆம் தேதி (வியாழக் கிழமை) தொடங்கி 20.4.2023 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top