Close
நவம்பர் 21, 2024 11:41 மணி

மதுரையில் இந்தியா- கானா நாடுகளின் சர்வதேச வணிக மாநாடு

புதுக்கோட்டை

மதுரையில் இந்தியா-கானா நாடுகள் இணைந்து நடத்திய தொழில் மாநாடு

இந்தியாவும் கானா குடியரசும் இணைந்து மதுரையில் சர்வதேச வர்த்தக மாநாட்டை 02.03.2023 அன்று  நடத்தியது.

இந்திய வர்த்தக பிரதிநிதிகள், அமைச்சர்கள் மற்றும் கானா      குடியரசின் அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோர் இந்தமாநாட்டில் பங்கேற்றனர். புதுக்கோட்டைபுஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி சார்பில், சிறப்பு விருந்தினராக புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி செயலாளர் எம்.ராஜாராம் கலந்து  கொண்டார்.

இந்த மாநாட்டில் தொழில் நிறுவனங்களுடன் பல புரிந்துணர் வு  ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி நடைமுறைக்கு தயாராக உள்ளன. இந்த மாநாட்டில் மதுரை நகரின் சிறப்பும், மதுரை யின் கலாசாரமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.அனீஷ்சேகர் மற்றும் அரசு    அலுவலர் கள் கலந்து கொண்டனர். மாநாட்டில், விவசாயக் கல்வி, இந்தியா மற்றும் கானா குடியரசின் விவசாயத் துறையில் முதலீடு குறித்து விவாதிக்கப்பட்டது.

புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியின் செயலாளர். எம். ராஜாராமுடன்,  எர்னஸ்ட்நானா ADJEI, அமைச்சர்- ஆலோசகர்,  அரசியல்- பொருளாதாரம், , புதுதில்லி கானா உயர் ஸ்தானிகர்  மற்றும் ஜனாதிபதி  அலுவலகத்தின் பொருளாதார  ஆலோசகர்   நானாதும்- பரிமா ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

கானா ADJEI, அமைச்சர் – ஆலோசகர், அரசியல் மற்றும் பொருளாதாரம்,   உயர்ஸ்தானிகர் எர்னஸ்ட்நானா மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் பொருளாதார ஆலோசகர்  நானாதும்- பரிமா ஆகியோர், புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியின் செயலாளர் எம். ராஜாராமிடம் அடுத்த மாதம் புதுக்கோட்டை  புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ள சர்வதேச அறிவியல் மாநாட்டில் பங்கேற் பதாக உறுதியளித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top