Close
நவம்பர் 22, 2024 6:26 காலை

காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கு முடிவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

சிபிஎம்எல் மக்கள் விடுதலை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டாவில் ஒன்றிய அரசு நிலக்கரி எடுக்கும் முடிவை கைவிட  வேண்டுமென  வலியுறுத்தி சிபிஎம்எல் மக்கள் விடுதலை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று தஞ்சாவூரில் நடைபெற்றது.

காவிரி டெல்டா மண்டலத்தில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் விவசாயத்திற்கு கேடு விளைவிக்கின்ற மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பொருள்களை எடுப்பதற்கு ஒன்றிய அரசாங்கம் அனுமதி அளித்து, அனைத்து கட்சிகள், விவசாயிகள், மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கடுமையான போராட்டம் நடத்தப்பட்டது.

இதன் விளைவாக, காவேரி டெல்டா மண்டலம் பாதுகாக் கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அறிவிக்கப்பட்டது . ஆனால், ஒன்றிய அரசால் திருவாரூர் மாவட்டம், தஞ்சை மாவட்டம் , கடலூர் மாவட்டம், அரியலூர் மாவட்டம் ஆகிய காவிரி பாசன நெற்களஞ்சிய  நிலப்பரப்பில் தமிழ்நாடு அரசாங்கத்தின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை மீறி நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க க டெண்டர் விடப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் கடுமையாக கண்டித்துள்ளன. விவசாயிகளும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒன்றிய மோடி அரசாங்கம் நிலக்கரி எடுப்பதை தடை செய்ய வலியுறுத்தி  தமிழ்நாடு சட்டமன்றத்தில்  தீர்மானம் கொண்டு வரவேண்டும்.  தமிழ்நாட்டைச் சேர்ந்த  நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவை மாநிலங்களவையில் தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பை பதிவு செய்ய வலியுறுத்தியும்  இந்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் இரா.அருணாசலம், ஜனநாயக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் து.ராமர் ஆகியோர் தலைமை வகித்தனர்.

மக்கள் விடுதலை பொதுச் செயலாளர் கசி.விடுதலைகுமரன் ஆர்ப்பாட்டத்தினை தொடக்கி  வைத்து பேசினார். கோரிக்கைகளை விளக்கி, தாளாண்மை உழவர் இயக்கத்தின் தலைவர் கோ.திருநாவுக்கரசு, உலகத் தமிழர் பேரவைப்பின் துணைத் தலைவர் அயனாவரம் சி.முருகேசன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன்.

சமவெளி விவசாயிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சு.பழனிராஜன் , தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்கள் சிபிஐ எம் பி. செந்தில்குமார், சிபிஐ வீரமோகன், புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சமரன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இணை பொதுச் செயலாளர் ராவணன்.

தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் தலைவர் தங்க குமாரவேல், தமிழர் அறம் அமைப்பின் தலைவர் ராமசாமி, எழுத்தாளர் சாம்பான், விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாவட்ட நிர்வாகி எஸ்.ஏ.பி.சேவியர், தமிழ் தேசிய முன்னேற்ற கழக நிர்வாகி வெ.குணசேகரன்.

சி பி எம் எல் மக்கள் விடுதலை நிர்வாகிகள் மருத.செல்வராஜ், வீ.வீரக்குமார், வெ. பாஸ்கர், பி.ஜோதிவேல் பல்வேறு கட்சி நிர்வாகிகள் தேவா, வெங்கடே சன், சுந்தரபாண்டியன், இருதயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  வடிவேல் இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் நன்றி கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top