Close
நவம்பர் 22, 2024 6:11 காலை

திருச்சியில் தமிழால் இணைந்த உறவுகளின் கூடல் சங்கமம்…!

திருச்சிராப்பள்ளி

திருச்சியில் நடைபெற்ற பல்துறை சான்றோர்கள் கலந்து கொண்ட தமிழ்உறவுகளின் கூடல் விழா சங்கமம்

திருச்சியில் பல்துறை சான்றோர்கள் கலந்து கொண்ட தமிழால் இணைந்த உறவுகளின் கூடல் சங்கமம் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது.

திருச்சியில் உள்ள பி.எல்.ஏ.ரத்னா ரெசிடென்சியில் நடைபெற்றவிழாவில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் புலவர் மா.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

விழாவில் தொடக்கமாக, தமிழக அரசின் ஆசிரியர் மனசுத் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சி.சதிஷ்குமார் பேசியதாவது: மருத்துவம், கல்வி, சேவை, இலக்கியம்,நீதி போன்ற பல்துறைகளில் சான்றோர்களாக திகழும் பலரும் தங்களது பணிக்கு அப்பால் தாய்மொழிக்காகவும் ,தான் வாழும் சமூகத்திற்காகவும் ஒன்றிணைந்து செயல்படுவது போற்றுதலுக்கு உரியது ஆகும்.

இது போன்ற முன்னெடுப்புகளால் தான் ஒரு நல்ல சமூகம் கட்டமைக்கப்படுகிறது.ஒரு நல்ல பேச்சு என்பது,எழுத்து என்பது கேட்பவரையோ,வாசிப்பவரையோ மனமாற்றத்தை தூண்டும் வகையில் இருக்க வேண்டும்.நாம் பேசும் பேச்சிலும், எழுத்திலும் ஒரு சமூக அக்கறை இருக்க வேண்டும் என்றர் அவர்.

விழாவில் தமிழ் உறவுகள் குழுமத்தில் பயணிக்கும் பல்துறை சான்றோர்கள் எழுதிய அலை என்ற 100 பக்க கவிதை நூலினை சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் மு.பூவதி வெளியிட்டார்.  முதல் பிரதியை கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்ட, தஞ்சாவூர் துணைமேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதியும்,  இரண்டாம் பிரதியை திருச்சி துணைமேயர் திவ்யா தனக்கோடியும் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் மருத்துவர்கள் சரயு, திருவேங்கடம் , தமிழ்ச்செல்வி, அன்பு செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் 5 நூல்கள் கொண்ட புத்தக தொகுப்பு விழாக் குழுவினரால் வழங்கப்பட்டது.

தேனியில் இருந்து விழாவிற்கு வந்திருந்த மருத்துவர் திருவேங்கடம் குடும்பத்தின் சார்பாக, விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மிளகு, ஏலக்காய் வழங்கி அதன் மருத்துவ குணங்களை எடுத்துக் கூறினார்கள்.

விழாவில் கலந்து கொண்ட அனைவரின் அனுபவப் பகிர்வால் , கவிதையால், பேச்சால் , பாடலால் அரங்கம் அமர்க்களமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top