அனைத்திந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் (AIPSO) புதுக்கோட்டை மாவட்ட குழுவின் சார்பாக பருவநிலை மாற்ற சவால்கள் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.
நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர் முனைவர் எஸ் தினகரன் கலந்து கொண்டு, பூமி வெப்பமயமாதலால் இந்தியா தமிழகம் வேளாண்மை தொழில் இயற்கை சீற்றம் பொருளாதார பாதிப்பு மனிதன் என்ன செய்ய வேண்டும் அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக விளக்கிப் பேசினார்.
முனைவர் சி ராஜசேகர் பேசுகையில், புதுக்கோட்டையில் அருகி வரும் தாவர இனங்கள் குறித்து அதனுடைய எதிர் காலம் குறித்து என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி குறிப்பிட்டார்.
இதில் மூத்த முன்னோடி பெரி குமாரவேல் கௌரவப்ப டுத்தப்பட்டார். இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வெள்ளத்துரை தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் விழா அறிமுகமும் தொகுப்புரையும் வழங்கினார்.
மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களை மாவட்ட செயலாளர் அன்பு மணவாளன் அறிமுகம் செய்தார். துணைத்தலைவர் மரம் ராஜா சிறப்பு செய்தானர். மேற்படி கூட்டத்தில் மேற்படி கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் பழ. குமரேசன் நன்றி வழங்கினார்.