Close
செப்டம்பர் 20, 2024 3:59 காலை

புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறக்கோரி தஞ்சையில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்ட ஏஐடியுசி தொழில் சங்கத்தினர்.

புதிய மோட்டார் வாகன சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி  ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் ஏ ஐ டி யு சி ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை ஒன்றிய மோடி அரசு திரும்ப பெற வலியுறுத்துவது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஒரு பகுதியாக,  தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு இன்று  நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் இரா.செந்தில் நாதன் ஆகியோர் தலைமை வகித்தனர்.  ஏஐடியுசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் துவக்கி வைத்து உரையாற்றினார். மாநில செயலாளர் ஆர்.தில்லைவனம் ஆர்ப்பாட்டத்தினை நிறைவு செய்து உரையாற்றினார்.

இதில், ஏஐடியுசி மாவட்ட தலைவர் வெ.சேவையா, மாவட்ட செயலாளர் துரை . மதிவாணன், வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் க.அன்பழகன், நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் தி.கோவிந்தராஜன், ஓய்வு பெற்றோர் சங்கத்தின் துணைச் செயலாளர் கே.சுந்தரபாண்டியன்.

அரசு போக்குவரத்து சங்க மாநில குழு உறுப்பினர் டி.கஸ்தூரி, டாஸ்மாக் தொழில் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கோடீஸ்வரன், தெருவோர வியாபார சங்க மாவட்ட செயலாளர் ஆர். பி.முத்துக்குமரன், கட்டுமான சங்கத்துணை தலைவர் பி.செல்வம் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ சங்கர் நிர்வாகிகள் சரவணன் , ஆனந்தராமன், நூர் முகமது, ரமேஷ், ராஜா, கணேசன், ராமசந்திரன், வின்சென்ட், பிரிட்டோ, முகமது ரபிக் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆட்டோ சங்க பொருளாளர் ஆர்.மலைச்சாமி நன்றி கூறினார்.

கோரிக்கைகள்:  ஒன்றிய மோடி அரசாங்கம் ஆட்டோ தொழிலை சீர்குலைக்கும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

காவல் துறை, வட்டார போக்குவரத்து துறை ஆகியோரின் அநியாய ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும். தமிழ்நாடு அரசு நலவாரிய பதிவுகளை எளிமைபடுத்தி, நலவாரிய அலுவலகத்தில் நேரடி பொறுப்பில் பதிவை செய்து கொடுக்க வேண்டும்.

ஆட்டோ பயணம் அனைவருக்கும் பயன்படும் வகையில் அரசே ஆட்டோ செயலியை உருவாக்க வேண்டும். இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.  60 வயது நிறைவு பெற்ற ஆட்டோ தொழிலாளர்கள் அனைவருக்கும் மாத ஓய்வூதியம்  9,000 வழங்க வேண்டும்.

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்ச ஊழல்களை தடுத்து நிறுத்த வேண்டும். ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வா தாரத்தை பாதுகாத்திடும் வகையில் மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்குவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை கள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top