புதுக்கோட்டை வடக்குராஜவீதி மீனாட்சி மகாலில் வி.ஏ. அபிநயா புத்தக நிலையம் சார்பில் 5 ஆயிரம் தலைப்புகளில் சுமார் 1 லட்சம் புத்தகங்களைக் கொண்ட மாபெரும் புத்தக விற்பனைக் கண்காட்சி மார்ச் 18 -ல் தொடங்கி 25 நாள்கள் நடைபெற்ற மாபெரும் புத்தகக்கண்காட்சி ஏப்ரல் 12 -ஆம் தேதி நிறைவடைந்தது.
இந்த புத்தக விற்பனை கண்காட்சியில், வாசகர்களின் கவனம் ஈர்த்த முக்கிய நூல்களான, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் மு, ராஜேந்திரன் எழுதிய சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவல் காலாபாணி உள்ளிட்ட சுமார் 1 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை நகரில் வடக்கு ராஜவீதி(ராதாகபே) மீனாட்சி மகாலில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியை, கம்பன் கழச்செயலர் ரா. சம்பத்குமார், கவிஞர் தங்கம்மூர்த்தி, புதுக்கோட்டை வாசகர் பேரவை செயலர் எஸ். விஸ்வநாதன், காவல் துறை உதவி ஆய்வாளர் ஜெ. மரியசாத்தோதிலகராஜ், மேலப்பட்டி அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர் மகேஸ்வரன் மாவட்ட சதுரங்க கழக நிர்வாகி செல்வம் , மருத்துவர் கோபாலகிருஷ்ணன்.
எம்எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர். ராஜ்குமார், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத்தலைவர் வீரமுத்து, குழந்தைகள் நலக்குழு தலைவர் கே. சதாசிவம் மற்றும் புத்தக ஆர்வலர்கள், பள்ளி ,கல்லூரி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டு தாங்கள் விரும்பிய புத்தகங்களை தேர்வு செய்தனர்.
புத்தக கண்காட்சி நிர்வாகி விஜயரங்கன் கூறியதாவது: இந்த கண்காட்சியில், எழுத்தாளர்கள் கல்கி, சாண்டில்யன், சோ, பாலகுமாரன், லட்சுமி, சுஜாதா, ரா.கி. ரங்கராஜன், எஸ். ராமகிருஷ்ணன், கண்ணதாசன், ஜெயகாந்தன், ஜெயமோ கன், ஓஷோ, ரமணிச்சந்திரன், முத்துலட்சுமி ராகவன், மல்லிகாமணிவண்ணன், பாலமுருகன், இந்திரா சவுந்தர் ராஜன், உள்ளிட்ட முன்னணி எழுத்தாளர்களின் நூல்கள்.
கவிஞர்கள் பாரதி, பாரதிதாசன், வாலி, வைரமுத்து, நா.முத்துக்குமார் எழுதிய கவிதை கட்டுரை நூல்கள்.மற்றும் நாவல்கள், கவிதை, இலக்கியம், இலக்கணம், மருத்துவம், சுயமுன்னேற்றம், பொதுகட்டுரைகள், ஆன்மீகம், ஜோதிடம், குழந்தை வளர்ப்பு, கல்வி, யோகா, சமையல் நூல்கள், போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள் உள்பட சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில் கவனம் ஈர்த்த முக்கிய நூல்களான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் மு, ராஜேந்திரன் எழுதிய சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவல் காலாபாணி, நாவல் 1801, குடவாயில் சுப்பிரமணியன் இராஜராஜேச்சரம், தமிழர் கோயில் கலை மரபு, சோழர் வரலாறு. அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு சுமார் 200 தலைப்புகளில் எழுதிய நூல்களும், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எழுதிய தன்னம் பிக்கை நூல்கள்,
தெற்கிலிருந்து ஒரு சூரியன், மாபெரும் தமிழ்க்கனவு, கிரியாவின் தமிழ்அகராதி ஆகிய படைப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
புத்தகக் கோட்டையான புதுக்கோட்டையில் 16 -ஆவது ஆண்டாக எங்கள் நிறுவனம் சார்பில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டில் மார்ச் 18 முதல் ஏப்ரல் 9 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தோம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை கொண்ட கவிஞர்கள், எழுத்தாளர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் அளித்த பேராதரவின் காரணமாக கூடுதலாக 3 நாள்கள் நீட்டித்து ஏப்ரல் 12 வரை புத்தக கண்காட்சி நடைபெற்றது என்றார் அவர்.