Close
செப்டம்பர் 20, 2024 3:49 காலை

புதுக்கோட்டை அருகே மக்கள் தொடர்பு முகாமில் 1,029 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடி உதவி

புதுக்கோட்டை

பெருங்களூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பங்கேற்ற ஆட்சியர் கவிதாராமு

மக்கள் தொடர்பு முகாமில்1,029 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை வட்டம், பெருங்களூர் வருவாய் கிராமத்தில், மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு  தலைமையில் (12.04.2023) நடைபெற்றது.

இம்முகாமில் தமிழக அரசு பல்வேறு அரசுத் துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்படும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்கள் மூலம் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களால் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இம்முகாமில் தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், கால்நடை பராமரிப்புத்துறை, பொதுசுகாதாரத்துறை, வேளாண் பொறியியல் துறை, வனத்துறை, மாற்றுத்திறனா ளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.

இம்முகாமில் வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தோட்டக்கலைத்துறை, தொழிலாளர் நலத்துறை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மாற்றுத்திறனா ளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில், 1,029 பயனாளிகளுக்கு ரூ.2,17,30,452 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.

பின்னர்  ஆட்சியர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில், கிராமங்கள் தோறும் மக்கள் தொடர்பு முகாம்களை நடத்துவதற்கு அறிவுறுத்தியுள் ளார்கள்.  அதன்படி இன்றையதினம் பெருங்களூர் வருவாய் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 1,029 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக அரசின் சார்பில் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மக்கள் தொடர்பு முகாமில் அரசின் திட்டங்களை விளக்கும் வகையில் கண்காட்சிகள் அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் இக்கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை அறிந்துகொண்டு பயன்பெற வேண்டும்.

இதுபோன்ற மக்கள் தொடர்பு முகாம்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதிகளை தேர்ந்தெடுக் கப்பட்டு, அப்பகுதிகளில் வாழும் பொதுமக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்து அவற்றை நிறைவேற் றிடும் வகையில் அக்கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து அரசின் திட்டங்கள்  வழங்கப்படுகிறது.

மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், தங்களது துறை சார்ந்த திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்ட தகவல்களை பொதுமக்கள் அனைவரும் தங்களது அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்களிடமும் தெரிவித்து தகுதியான பொதுமக்கள் அரசின் திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும். மருத்துவத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பொதுமக்கள் பார்வையிட்டு நல்வாழ்விற்குரிய தகவல்களை அறிந்து கொண்டு நலவாழ்வு வாழ வேண்டும்.

மேலும் பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் திட்டங்களை தெரிந்துகொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு..

இம்முகாமில், முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப் பாண்டியன் , மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, புதுக்கோட்டை ஒன்றியக் குழுத்தலைவர் பி.சின்னையா.

மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) எம்.மாரி, மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.சம்பத்.

வேளாண்மை இணை இயக்குநர் (பொ)  ஆர்.மோகன்ராஜ், ஊராட்சிமன்றத் தலைவர்  சரண்யா ஜெய்சங்கர், வட்டாட்சியர் விஜயலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேலன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள்; கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top