Close
நவம்பர் 22, 2024 1:10 மணி

ஆன்லைன்  மூலம் கடன் வாங்கிய  ஆலைத் தொழிலாளி தற்கொலை

சென்னை

தூக்கிட்டு தற்கொலை

சென்னை எண்ணூரில் ஆன்லைன் மூலம் ரூ. 5 லட்சம் கடன் வாங்கிய ஆலைத் தொழிலாளி கன்னியப்பன் (27)  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எண்ணூர் சுனாமி மறுவாழ்வு குடியிருப்பு பகுதி 67 -ஆவது பிளாக்கில் வசித்து வருபவர் புருஷோத்தமன்.  இவரது மகன் கன்னியப்பன்.  திருவொற்றியூரில் உள்ள தனியார் பருப்பு ஆலை ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் மூலம் ரூ. 5 லட்சம் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால் இக்கடனை திருப்பி செலுத்தாததால் கடன் வழங்கிய நிறுவனத்தின் ஊழியர்கள் தொடர்ந்து கண்ணியப்பனை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்ச லுக்கு ஆளான கன்னியப்பன் வியாழக்கிழமை வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அக்கம் பக்கத்தில் வசிப்போர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கன்னியப்பனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு வெள்ளிக்கிழமை கன்னியப்பனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. இதுகுறித்து எண்ணூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top