Close
செப்டம்பர் 19, 2024 11:13 மணி

கந்தர்வகோட்டை வட்டார வள மையத்தில் உலக ஆட்டிசம் நாள்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வட்டார வள மையம் உலக ஆட்டிச தினம் கடைபிடிக்கப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் வட்டார வள மையம் உலக ஆட்டிசம் நாள் கடைபிடிக்கப் பட்டது.

வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு பிரகாஷ் ஒருங்கிணைத்தார்.  இந்நிகழ்விற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுரேஷ் குமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப் பாளர் அ.ரகமதுல்லா பேசியதாவது:  உலக ஆட்டிச நாள் 2007 ஆம் ஆண்டு முதல் ஐ.நா.வின் அறிவுறுத்தலின் பேரில் உலகம் முழுவதிலும் இந்த நாள் ஆட்டிச விழிப்புணரவு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆட்டிசம் ஏ.எஸ்.டி என்று சுருக்க மாக சொல்லப்படுகிறது. இதன் முழுமையான பெயர் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு. இது ஒருவகையான நரம்பியல் குறைபாடு. இந்த பாதிப்பு குறித்து முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இதன் அறிகுறிகள் மூன்று வயது முதல் தென்படும்.தனிமை யை விரும்புவது உடல் நலக்குறைவு வெளிக்காட்ட தெரியாதது, மற்றவர்கள் இருப்பதைப் பற்றிய உணர்வில்லாதது, கூடி விளையாடும்போது, தனக்குரிய தருணத்தை பயன்படுத்திக் கொள்ள தெரியாதது.

குழந்தையின் முதல் வார்த்தை வழக்கத்திற்கு மாறாக இருப்பதுதன்னிடம் உள்ள பொருட்களைக் கொண்டு, திரும்ப, திரும்ப சுற்றுதல், வரிசைப்படுத்துதல் போன்ற செயல்களை செய்வது ஒரு பொருளில், குறிப்பிட்ட ஒரு பாகத்தில் மட்டும் ஆர்வம் காட்டுவது, பேச்சில் தெளிவில்லாமை. தன்னிடம் சொல்லப்பட்ட சொற்களை திரும்ப, திரும்ப சொல்வது, கைகளை அவ்வப்போது பின்னிக் கொள்வது.

கைகளை சுழற்றுவது,  தலையை இடித்துக் கொள்வது போன்ற மாறுபட்ட உடல் செய்கைகள் அதீத பயம் சுற்றுப்புறத்தில் ஏற்படும் சிறிய மாற்றத்தைக்கூட, ஏற்றுக் கொள்ளாமல் துன்பப்படுவது தினசரி செய்யும் வேலைகளை, அதே வரிசைப்படி செய்ய பிடிவாதம் பிடிப்பது போன்ற குறைபாடுகள் “ஆட்டிசம்’ குறைபாடு இருக்க, வாய்ப்புகள் அதிகம்.

இக்குழந்தைகளுக்கு, “ஆக்குபேஷனல்தெரபி’யில், உணர்வு களை ஒருங்கிணைக்கும் பயிற்சியை, 6 மாதங்கள் வரை அளிப்பதன் மூலம், அவர்களை,  ஆட்டிசம் குறை பாட்டில் இருந்து விடுவிக்கலாம். ஆக்குபேஷன் தெரபி சிகிச்சையை தொடர்ந்து அளிக்க வேண்டும் என்றாக் அவர்.

ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு படம் திரையிடப்பட்டது. ஆசிரியர் பயிற்றுனர் சங்கிலி முத்து, முன்னிலையில் வைத்தார். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து , பட்டதாரி ஆசிரியர் ஸ்டீபன் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்கான  ஒருங்கிணைைப்பை  இயன் முறை மருத்துவர் சரண்யா, சிறப்பாசிரியர்கள் அறிவழகன், ரம்யா,ராதா, பிரியா, தீபா, ராணி கணக்காளர்கள் ராஜலட்சுமி, ராஜேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top