Close
செப்டம்பர் 20, 2024 4:14 காலை

உலக பாரம்பரிய நாள்: கந்தர்வகோட்டை அரசுபள்ளி மாணவர்களுக்கு கல்வெட்டு வாசிப்பு பயிற்சி

புதுக்கோட்டை

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்களுக்கு கல்வெட்டு வாசிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு வரலாற்று சின்னங்களை பாதுகாக்க வலியுறுத்தி பேரணியும்,கந்தர்வ கோட்டை சிவன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை வாசிப்பதற்கான பயிற்சியும் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் நடத்தப்பட்டது.

முன்னதாக நடைபெற்ற பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் வே பழனிவேல் தலைமை வகித்து, கல்வெட்டு வாசிப்பு  பயிற்சியை தொடக்கி வைத்தார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சௌ.தெய்வீகன் வரவேற்றார்.

பாலசுப்ரமணியம் குருக்கள்,முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா சிவாசிவனடியார் குழுவைச் சேர்ந்த பாலமுருகன்,தொல்லியல் ஆர்வலர் ஓய்வு பெற்ற ஆசிரியர் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன் மாணவர்களுக்கு கல்வெட்டு வாசிப்பு பயிற்சியளித்தார்.

சிவன் கோவிலில் உள்ள பழமையான பத்தாம் நூற்றாண்டு கல்வெட்டு கருவறைத்தூணில் காணப்படுகிறது.13 -ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கோயில் முன்மண்டப பலகைக்கல்லில் காணப்படுகிறது.

புதுக்கோட்டை
சிவன் கோவிலில் உள்ள பழமையான பத்தாம் நூற்றாண்டு கல்வெட்டு கருவறை த்தூணில் காணப்படுகிறது.

தூண்களில் 14, 15 -ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டு கள் காணப்படுகின்றன.பல்வேறு காலகட்டங் களை சேர்ந்த கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துருக்களின் மாறுபாடு கள் குறித்து எடுத்துக்கூறி மாணவர்கள் சரியாக வாசிப்பதற்கு பயிற்சி வழங்கப்பட்டது,

தொடர்ந்து கல்வெட்டுகளை படி எடுப்பதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டது. மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்து கல்வெட்டுகளை படி எடுத்தனர் .

இந்நிகழ்வில், நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பாளர் எம்.சீனிவாசன், பள்ளி ஆசிரியர்கள் ஓ.சித்ராதேவி, எஸ்.பாத்திமா, அய்யப்பன், ஆர்.செல்வமணி, சரவணன், அருந்தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top