Close
செப்டம்பர் 20, 2024 4:03 காலை

ரமலான் பெருநாளை முன்னிட்டு 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கல்

சென்னை

ரமலான் பெருநாளை முன்னிட்டு 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

ரமலான் பெருநாளை முன்னிட்டு 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
ரமலான் பெருநாளை முன்னிட்டு ஆர். கே. நகர் தொகுதியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
ஆர்.கே. நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.ஜெ. எபினேசர் ஏற்பாட்டின் பேரில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் பெருநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புது வண்ணாரப்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுமார் 2 ஆயிரம் பேருக்கு புத்தாடைகள், அரிசி, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை வழங்கினார். மேலும் தையல் பயிற்சி முடித்த 40 பேருக்கு தையல் இயந்தி ரங்களை உதயநிதி வழங்கினார்.
பின்னர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:  சிறுபான்மை இன மக்களின் நலனை காக்கும் வகையில் இது போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது பாராட்டுக்குரியது. சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் மூன்று கட்டங்களாக சுமார் பத்தாயிரம் இஸ்லாமிய குடும்பங் களுக்கு ரமலான் பெருநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதில் கடந்த 10 ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பி னராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,  டி.டி. வி. தினகரன் உள்ளிட்ட எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ள வில்லை.
ஆனால் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தற்போது இத்தொகு தியில் ரூ. 10 கோடி செலவில் விளையாட்டு அரங்கம் அமைக்கவும், ரூ.6 கோடி செலவில் நடை பயிற்சிக்கான நடைபாதை அமைக்கவும் அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே சமூக நீதியை காப்பாற்றுவதில் தமிழ்நாடு அரசு முன்னிலையில் இருந்து வருகிறது. இதனை பின்பற்றி தற்போது இதர மாநிலங்களும் ஆதரவை தெரிவித்து வருகின்றன. இது போன்ற விழாக்களை நடத்துவதன் மூலம் சமூகத்தில் மத நல்லிணக்கத்தை வளர்த்திட முடியும் என்றார் உதயநிதி ஸ்டாலின்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே. சேகர் பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, மாவட்ட செயலாளர் இளைய அருணா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பி.சங்கர்,  ஐ ட்ரீம் மூர்த்தி, ஆர்.டி.சேகர்,  தாயகம் கவி, திமுக நிர்வாகிகள் ஜெபதாஸ், பாண்டியன், லட்சுமணன், வழக்கறிஞர்கள் மருது கணேஷ், ரவிச்சந்திரன், கதிரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top