Close
நவம்பர் 25, 2024 11:09 காலை

தொழிலாளர் விரோத தொழிற்சாலை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஏ ஐ டி யு சி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

தமிழக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி தொழில் சங்கத்தினர்

தொழிலாளர் விரோத தொழிற்சாலை சட்ட திருத்தத்தை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வலியுறுத்தி ஏஐடியுசி தொழில் சங்கம் சார்பில்  மாநிலம் தழுவிய  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏஐடியுசி தமிழ் மாநில குழு சார்பில் தமிழ்நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்   (21.4. 2023) வெள்ளிக்கிழமை தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம், அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி மாநிலச் செயலாளர் ஆர். தில்லைவனம் தலைமை வகித்தார். தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்

 கோரிக்கைகள்: ஒன்றிய மோடி அரசாங்கம் கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக, போராடி பெற்ற தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க சட்டங்கள் 44 சட்டங்களை நான்கு சட்ட தொகுப்புகளாக சுருக்கி உள்ளது .

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தொழிலாளர் விரோத சட்டங்களை அந்தந்த மாநில அரசுகள் அமல் படுத்தவில்லை, ஆனால் தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள சுருக்கப்பட்ட தொழிலாளர் சட்டங்களில் முதலாவதாக தொழிற்சாலை சட்ட திருத்தத்தில் 8 மணி நேர வேலையை‌ 12 மணி நேரமாக உயர்த்துதல், ஊதிய குறைப்பு, சமூக நலத் திட்டங்களை கை விடுதல்.

நிரந்தர பணியிடங்களில் ஒப்பந்த முறையை கொண்டு வருவது உள்ளிட்டசட்ட தொகுப்புக்கு,   அரசாங்கம்,  தொழிற்சங்கம், முதலாளிகள் கொண்ட முத்தரப்பு குழு கூட்டத்தை நடத்தாமல், கருத்து கேட்காமல், தற்பொழுது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில் தொழிலாளர் தொழிற்சாலை சட்ட திருத்த (65-ஏ) தொகுப்பு களை விவாதத்திற்கு விடாமல், திடீரென அறிவித்து, குரல் வாக்கெடுப்பு மூலம் 40 நொடிகளில் நிறைவேற்றியுள்ளது.

நூறு ஆண்டுகளுக்கு மேலாக 8 மணி நேர வேலை,8 மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம் என்று போராடி பெற்ற தொழிலாளர் சட்டத்தை வெறும் 40 நொடிகளில் ஜனநாயகத் திற்கு விரோதமாக அரசு நிறைவேற்றி உள்ளதை கண்டித்தும், தொழிலாளர் விரோத, தொழிற்சாலை சட்ட திருத்தத்தை  தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், பொருளாளர் தி.கோவிந்தராஜன், விவசாய தொழிலாளர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் ஜி.கிருஷ்ணன்,. பட்டு கைத்தறி சங்க மாநில தலைவர் ஜி.மணிமூர்த்தி, மின்வாரிய சம்மேளன மாநிலத் துணைத் தலைவர் பொன்.தங்கவேல்.

ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை, கும்பகோணம் அரசு போக்குவரத்து சங்க பொதுச்செயலாளர் எஸ்.தாமரைச்செல்வன், கட்டுமான சங்க மாவட்ட துணைத் தலைவர் பி.செல்வம், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் இரா.செந்தில்நாதன்.

உடலுழைப்பு சங்க மாவட்ட பொருளாளர் பி.சுதா, உழைக்கும் பெண்கள் அமைப்பு செயலாளர் பரிமளா, டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கோடீஸ்வரன், நுகர்பொருள் வாணிபக்கழக சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.தியாகராஜன், தஞ்சை நகர தொழிற்சங்க தலைவர் ஆர்.பிரபாகர் உள்ளிட் டோர் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார்கள்.

முடிவில் ஏஐடியுசி மாவட்ட தலைவர் வெ.சேவையா ஆர்ப்பாட்டத்தினை நிறைவுரையாற்றினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top