Close
நவம்பர் 22, 2024 12:41 காலை

புதுக்கோட்டையில் விற்பனைக்கு குவிந்த மாங்கனிகள்…!

புதுக்கோட்டை

புதுக்கோட்டை குவிந்த மாம்பழங்கள்

புதுக்கோட்டை நகரில்  உள்ள கடைகள் மாம்பழங்கள் விற்பனைக்காக குவிந்துள்ளன.
புதுக்கோட்டையில் பழக்கடைகளிலும், சாலையோர கடைகளிலும் மாம்பழங்கள் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை காணமுடிகிறது. பொதுமக்களும் மாம்பழங்களை விரும்பி வாங்கி செல்கின்றனர்.
உள்ளூர் மட்டுமின்றி திண்டிவனம், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஆந்திர மாநிலம் சித்தூர், கடப்பா வட்டாரங் களில் இருந்தும் மாங்காய் மற்றும் மாம்பழ வரத்து உள்ளது. கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் தற்போது முதல் பூ விட்டு மாங்காய் காய்க்க தொடங்கியுள்ள நிலையில் புதுக்கோட்டைக்கு மார்க்கெட்டுக்கு மாங்காய் ,மாம்பழம்  வரத்து தொடங்கியுள்ளது.

தற்போது 2 முதல் 5 டன்கள் வரையே வரத்து உள்ளது.அடுத்த சில நாட்களில் முழுமையாக சீசன் களைக்கட்ட தொடங்கும் என்று வியாபாரிகள் நம்பக்கை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மாம்பழம் விற்பனை செய் யும்    வடக்குராஜவீதியுள்ள டி இ எல் சி பள்ளிக்கூடம்  எதிரிலுள்ள பழக்கடை      வியாபாரி கோபியிடம்  கூறியதாவது:

இந்த ஆண்டு விளைச்சல் குறைவாக இருக்கும் என்று மாங்காய் சாகுபடியில் இறங்கியுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதனால் கடந்த ஆண்டைப் போல இல்லாமல் பூ விட்ட நிலையில்  மார்க்கெட்டுக்கு குறைந்த
அளவுதான் மாங்காய், .மாம்பழம் வரத்து உள்ளது.

அதுவும் திண்டிவனம் வட்டாரத்தில் இருந்து பங்கனப்பள்ளி, இமாம்பசந்த் ரகங்கள் மட்டுமே வருகின்றன. சீசன் முழுமையாக தொடங்கும்போது நமது மாவட்டம் மட்டுமின்றி கிருஷ்ணகிரி, ஆந்திர மாநிலம், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்தும் மாங்காய் வரத்து இருக்கும் என்று தெரிவித்தார்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் விற்பனைக்கு வந்திருக்கும் மாம்பழங்கள்

செந்தூரா, பங்கனபள்ளி ரக மாம்பழம் கடைகளில்  சுமார் கிலோ ரூ.100 முதல்  ரூ.120-க்கு விற்பனையாகிறது. தற்போது சேலத்தில் இருந்து மாம்பழங்கள் வரத்து வரத் தொடங்கி உள்ளதாகவும், சீசன் மேலும் அதிகரித்தபின் மாம்பழங்கள் கூடுதலாக வரும் என வியாபாரி தெரிவித்தார் 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top