Close
செப்டம்பர் 20, 2024 4:07 காலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரமலான் பெருநாளையொட்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ரமலான் பெருநாளையொட்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை நடத்தினர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரமலான் பெருநாளையொட்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை  நடத்தினர்.

புதுக்கோட்டையில் ரமலான் பெரு நாளையொட்டி இஸ்லாமியர்கள் பல்வேறு பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகை நடத்தி தங்களது 29 நாள் நோன்பு கடமையை நிறைவேற்றினர்.

அதிகாலை விடிவதற்கு முன்பாக உணவருந்தி மாலை அந்தி சாய்ந்தபிறகு மீண்டும் உணவருந்தி விரதத்தை முடிக்க வேண்டும். இப்படி ஒருமாதம் விரதமிருந்து முடியும் நாளே ரமலான் பெருநாள், ஈகைத்திருநாளாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது.

நிகழாண்டுக்கான ரமலான் பெருநாளை முன்னிட்டு புதுக்கோட்டை ஈத்கா பள்ளிவாசல் மைதானத்தில் நடை பெற்றசிறப்புத் தொழு கையில்  நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

இஸ்லாமியர்களுக்கு ரமலான் வாழ்த்துக் கூறிய திருவருள் பேரவை நிர்வாகிகள்…

புதுக்கோட்டை
இஸ்லாமியர்களுக்கு ரமலான் வாழ்த்துக்கூறிய திருவருள் பேரவை நிர்வாகிகள்

இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை திருவருள் பேரவை சார்பில் அதன் தலைவர் ஆர். சம்பத்குமார், சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா, வர்த்தகர் கழக நிர்வாகிகள் சாந்தம்சவரிமுத்து,  சாகுல்அமீது, ரோட்டரி ஆளுநர் அ.லெ. சொக்கலிங்கம்,  இளங்கோவடிகள் மன்ற செயலர் சத்தியராம் ராமுக்கண்ணு.

பேரவை நிர்வாகிகள் மத்தி்யாஸ், ஆரோக்கியசாமி, சிறுதொழில் அதிபர் சங்க நிர்வாகி முரளி, ஆசிரியர் சங்க நிர்வாகி ராஜேந்திரன், உணவக உரிமையா ளர் சங்க நிர்வாகி ராதாகபே ராஜா, மூத்த வழக்குரைஞர் ஏ. சந்திரசேகரன்,  டாக்டர் சலீம்,  வரலாற்றுப் பேரவைத் தலைவர் ஜெ. ராஜாமுஹமது, நகர்மன்ற துணைத்தலைவர் எம். லியாகத்அலி உள்ளிட்டோர் பங்கேற்று ரமலான் வாழ்த்து தெரிவித்தனர்.

இதைப் போல, திருவப்பூர், மச்சுவாடி ஆகிய பள்ளிவாசல் களிலும், தவ்ஹீத் ஜமாத் சார்பில் மார்த்தாண்டபுரம் தவ்ஹீத் ஜும்மா பள்ளி வாசலிலும் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.

இது போல, பொன்னமராவதி, அன்னவாசல், காரையூர், மேலத்தானியம், காட்டுபாவா பள்ளி வாசல், திருமயம், கந்தர்வகோட்டை, அண்டக்குளம், திருவள்ளுவர் நகர், மச்சுவாடி, பூங்காநகர் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற தொழுகை நிகழ்ச்சிகளில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இது போல் மாவட்டம் முழுதும் வாழும் இஸ்லாமியர்களால் ரமலான் பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top