தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் அவமதிக்கப்பட்ட சம்பவத்துக்கு இடதுசாரி அமைப்புகளும் பொது மக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ் பல்கலைக் கழகத்தில் இரண்டு ஆண்டுகள், மூன்றாண் டுகள்,. ஐந்து ஆண்டுகள் ஆராய்ச்சி படிப்பு முடித்த பல்கலை மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பதற்காக தமிழ்நாடு ஆளுநர் ரவி இன்று தஞ்சைக்கு வருகை தந்திருந்தார்.
தமிழ் பல்கலைக்கழகத்தில் விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்திய அரசியலமைப்பிற்கு எதிராக வும், மார்க்சியத்தை இழிவுபடுத்தியும்,. மத துவேசத்தையும், தமிழ்நாட்டின் தாய்மொழி தமிழக்கு எதிராக பேசி வருகின்ற ஆளுநரைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் தஞ்சாவூரில் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற இருந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் ஜி. அரவிந்தசாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் என்பதால், அவர் உளவுத்துறை மற்றும் காவல் துறை துறையால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அதேபோல் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு காலம் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற பல்கலை விழா அரங்கில் இருந்த இடதுசாரி சிந்தனையாளர் மாணவர் ஜான் வின்சென்ட் வேதா என்பவரும் உளவுத்துறை மற்றும் காவல்துறையினரால் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தனிமை அறையில் அடைக்கப்பட்டிருந்தார் .
இந்த சம்பவம் குறித்த தகவல் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியினர்களுக்கு தெரிய வந்ததையடுத்து, மாணவர்களை விடுவிக்க ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதன் விளைவாக இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் ஜி. அரவிந்தசாமிக்கு தமிழ் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் பட்டம் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால் ஜான் வின்சென்ட் வேதாவுக்கு முனைவர் பட்டத்தை தமிழ் பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள், தோழர்கள், மத்தியில் புரட்சிகர சிந்தனை உள்ள மாணவர் தலைவர்கள் அவமானப்படுத்தப் பட்டது மனித உரிமை மீறிய செயலாகும். தஞ்சை மாவட்ட மக்களின் சார்பில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக செயலை கண்டிப்பதாகவும் தெரிவித்தனர்.