Close
செப்டம்பர் 20, 2024 1:25 காலை

ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞரணி பேரவையினர்

ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் பதிவு செய்யும் முறையை ரத்து செய்ய கூறி தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞரணி பேரவை சார்பில் புதுக்கோட்டை பி.எல்.ஏ ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் 150 கிராமங்களில் ஆண்டுதோறும் மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு கிராமங்களிலும் மழை பெய்ய வேண்டும் விவசாயம் செழிப்பதற்காகவும் கிராம கோவிலில் திருவிழா கொண்டாடப்பட்டு திருவிழாக்களில் ஜல்லிக்கட்டு போட்டி மிக முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது.

தங்கள் கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு கிராமத்தில் உள்ள ஜல்லிக்கட்டு காளைகளின் வளர்ப்பவர் களுக்கு பாரம்பரிய முறையாக மரியாதை செய்து பாக்கு வெற்றிலை வைத்து தங்கள் கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்து காளைகளுக்கு உரிய மரியாதை செலுத்தி ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அழைத்துச் செல்வார்கள்

ஆனால் தற்பொழுது திமுக அரசு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மற்றும் மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்த பின்பு தான் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற சுற்றறிக்கை அடிப்படையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

ஆனால் பல கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்ப வர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் மேலும் கிராமங்களில் ஆன்லைன் வசதி இல்லாததாலும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய முடியாமலும் பதிவு செய்ய தெரியாமலும் தங்களது ஜல்லிக்கட்டு காளைகளை போட்டியில் பங்கேற்க முடியாமல் போகிறது.

இதனால் நாட்டின காளைகள் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கிராமங்களில் பாரம்பரி யமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரு சில காளைகளை மட்டும் கலந்து கொள்ள வாய்ப்புகள் கிடைக்கின்றது.

தமிழக அரசு உடனடியாக ஆன்லைன் பதிவு செய்யும் முறையை ரத்து செய்து பழைய முறைப்படி காளைகளை பதிவதற்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் அணி பேரவை தலைவர் சிவா தலைமையில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் அணி பேரவை சார்பாக புதுக்கோட்டை மாவட்ட பி.எல்.ஏ.ரவுண் டானா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள் உரிமையாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top