8 மணி நேர வேலை உள்ளிட்ட போராடி பெற்ற உரிமைகளை பாதுகாப்போம். மே தின கொடியேற்று விழாவில் ஏஐடியூசி உறுதி ஏற்பு
உலகம் முழுவதும் தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் மே 1 -ஆம் தேதியை உழைப்பவர் உரிமை நாளாக கொண்டாடி வருகின்றனர். நூறு வருடங்களுக்கு முன்பு ஆலைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டு தொழிலாளர்கள் 12 மணி நேரம், 15 மணி நேரம் என்று நாளில் பெரும் பகுதியை உழைப்பதற்கு செலவிட்டனர்.
அவர்களுக்கு ஓய்வு இல்லை, உறக்கமில்லை,. சரியான உணவு இல்லை. உழைப்பவர்களின் உரிமைகளுக்காக போராடி 8 மணி நேர வேலை ,உறக்கம், ஓய்வு என்று உரிமைகளை பெற்ற தந்த 137 வது மே தினம் மற்றும் தமிழ்நாட்டில் பொது வுடமை சிந்தனையாளர், தொழிற்சங்க தலைவர் ம.சிங்காரவேலர் 1923 ம் ஆண்டு மே 1 -ஆம் தேதியன்று இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில் மே தின பேரணியை நடத்திய நூறாவது மே தின விழாவாகவும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக தஞ்சாவூர் கோட்ட அலுவலகம், ஜெபமாலை புரம் நகர கிளை, கீழவாசல், சத்யா நகர் , கட்டுமான சங்க கிளைகள், டாஸ்மாக் மாவட்ட அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மே தின கொடியேற்று விழா நிகழ்ச்சிகள் இன்று காலை 9 மணிக்கு துவங்கி மதியம் 1 மணி வரை நடை பெற்றது.
நிகழ்விற்கு ஏஐடியுசி மாவட்ட தலைவர் வெ.சேவையா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன் முன்னிலை வகித்தார். ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை, துணைத் தலைவர் கே. சுந்தரபாண்டியன்.
தெரு வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.பி. முத்து குமரன், அரசு போக்குவரத்து சங்க பொதுச் செயலாளர் எஸ்.தாமரைச்செல்வன், நிர்வாக குழு உறுப்பினர் டி கஸ்தூரி, டாஸ்மார்க் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கோடீஸ்வரன், பொருளாளர் என்.இளஞ்செழியன். கட்டுமான சங்க மாவட்ட துணைத் தலைவர்கள் பி.செல்வம் , சிகப்பிஅம்மாள் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்று மே தின கொடியேற்றி உரையாற்றினார்கள்.
கொடியேற்றும் நிகழ்ச்சியில் ஏஐடியுசி இணைப்பு சங்க நிர்வாகிகள் வியாகுலமேரி, பி.சக்திவேல், சி.ராஜமன்னன், டி.சந்திரன், ஜி.சண்முகம், டி. தங்கராசு, எஸ் .மனோகரன், டாஸ்மாக் சங்க நிர்வாகிகள் பால.வடிவேலன், கருணாகரன், திலகர், இடதுசாரிகள் பொதுமேடை மாநகர செயலாளர் ஆலம்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் மக்களுக்கு சேவை செய்கின்ற அரசு போக்குவரத்து கழகங்கள், மின்சாரம், வங்கி , இன்சூரன்ஸ் உள்ளிட்ட மத்திய, மாநில பொதுத்துறைகளை தனியார் மய நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பது, அரசு போக்குவரத்து கழகங்களில் பயணிகள் சேவையை கருதி முழுமையாக பேருந்துகளை இயக்குவது.
தேவையான ஓட்டுனர், நடத்துனர்,தொழில்நுட்ப பணியாளர் களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவது, ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவின் படி, அகவிலைப்படி உயர்வுகளை வழங்குவது. இருபது வருடங்க ளாக பணிபுரிந்து வரும் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது.
பணி பாதுகாப்பு வழங்குவது, கட்டுமானம்,. உடல் உழைப்பு தொழிலாளர்களின் நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத் துவது, ஓய்வூதியம் வழங்குவதில் நடைமுறையில் உள்ள குறைபாடுகளை களைவது உள்ளிட்ட கோரிக்கைகள் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
ஒன்றிய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத சட்டங்க ளையும், நடவடிக்கைகளையும், கொள்கைகளையும் எதிர்த்து உறுதியுடன் போராடுவது என்று மே தின நிகழ்ச்சியில் உறுதி ஏற்கப்பட்டது .