செலவு மிச்சப்படுத்த நினைத்து அமைத்த திறந்தவெளி மேடையால் சாதனை செம்மல் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்எல்ஏ மழையில் நனைந்த படி பொதுக்கூட்ட பேசிய நிலை குறித்து தொண்டர்கள் ஆதங்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் ஒன்றியத்தில் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மேதின விழா பொதுக்கூட்டம் கள்ளிப்பட்டியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகமுன்னாள் அமைச்சரும், கோபி சட்டமன்றஉறுப்பினருமான செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
கூட்டம் துவங்கிய போது மழை தூறல்கள் விழுந்த வண்ணம் இருந்தது. சிறிது நேரத்தில் மழை பலமாக பெய்ய துவங்கியது.
இதனையடுத்து மேடையில் அமர்ந்திருத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மழையில் நனைந்து விடாமல் இருப்பதற்காக அதிமுக தொண்டர் ஒருவர் குடை ஒன்றை பிடித்தபோது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதனை தவிர்த்து விட்டு மழையியில் நனைந்தபடியே அமர்ந்திருந்தார்.
தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக கூட்டத்தை விரைவாக முடிக்க வேண்டிய கட்டாயத்தினால் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கொட்டும் மழையை பொருட்படுத் தாமல் அங்கு கூடியிருத்த அதிமுக தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக மே தின உரையாற்றினார்.
அதே நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில்,செலவு மிச்சப்படுத்துவதற்காக திறந்தவெளி மேடை அமைக்கப்பட்ட தன் காரணமாகவே , அதிமுகவின் முக்கிய புள்ளியாக திகழும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மழையில் நனைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் என்று தொண்டர்கள் ஆதங்கங்கத்தை வெளிப்படுத்தினர்.