Close
செப்டம்பர் 20, 2024 1:30 காலை

ஓணாங்குடியில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கிராம அறிவு மையம் இணைந்து நடத்திய பாலசபா

புதுக்கோட்டை

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கிராம அறிவு மையம் மற்றும் ஓணாங்குடி ஊராட்சி இணைந்து நடத்திய பாலசபா நிகழ்வில் பேசுகிறார் தமிழ்நாடு அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சி துறை முதன்மை ஆலோசகர் ஆர்.சுஜாதா.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கிராம அறிவு மையம் மற்றும் ஓணாங்குடி ஊராட்சி இணைந்து நடத்திய  குழந்தைகள் பங்கேற்ற பாலசபா நிகழ்வு  ஓணாங்குடியில் நடைபெற்றது.

நிகழ்விற்கு ஓணாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.முருகேசன் தலைமை வகித்தார்.  இதில், தமிழ்நாடு அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சி துறை முதன்மை ஆலோசகர் ஆர்.சுஜாதா  பேசியதாவது:

புதுக்கோட்டையில் முதன் முதலாக ஏற்பாடு செய்யப் பட்டுள்ள பாலசபா நிகழ்வில் பங்கேற்பதில்  மகிழ்ச்சி யளிக்கிறது.  பாலசபா நிகழ்வு என்பது குழந்தைகளை சமூகம் மற்றும் ஜனநாயகத்தில் பங்கேற்க செய்யும் முக்கிய நிகழ்வாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளில் முக்கிய அம்சமான குழந்தைகளை நல கிராமத்தை உருவாக்குதலுக்கு இந்த பால சபா நிகழ்வும் மிகவும் அடிப்படையான ஒன்றாகும்.

கிராமம் மற்றும் பள்ளிகள் சார்ந்த குழந்தைகளின் பிரத்தியோக தேவைகளை குழந்தைகளே எடுத்துச் சொல்ல ஒரு வாய்ப்பாக இந்த பாலசபா நிகழ்வு அமையும். மேலும் குழந்தைகள் பொது நிகழ்வுகளில் பங்கேற்கவும், பேச்சாற்றலை வளர்க்கவும் இந்த நிகழ்வு தூண்டுதலாக அமையும். இந்த நிகழ்வு மாதம் ஒரு முறை நடத்தப்படும்.

குழந்தைகள் சொல்லும் தேவைகளை கிராம சபா கூட்டத்தில் விவாதித்து அதனை நிறைவேற்ற மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார் சுஜாதா.

புதுக்கோட்டை
குழந்தைகள் பங்கேற்ற பாலசபா நிகழ்வு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கிராம அறிவு மையம் மற்றும் ஓணாங்குடி ஊராட்சி இணைந்து நடத்திய பாலசபா நிகழ்வு ஓணாங்குடியில் நடைபெற்றது.

பாலசபா நிகழ்வை அரிமளம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மேகலா முத்து தொடக்கிவைத்து  பேசுகையில் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் தேவைகளை குழந்தைகளிடமிருந்து தெரிந்து கொள்ளும் வாய்ப்பை பால சபா வழங்கியுள்ளது.

குழந்தைகள் தெரிவித்துள்ள தேவைகளான நூலகம், நீட் உள்ளிட்ட பொது தேர்விற்கு தயார் செய்வதற்கான நூல்கள் மற்றும் குழந்தைகள் நூலகம் ஆகியவைகள் இங்கு செயல்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் கிராம அறிவு மையம் மூலம் விரைவில் ஏற்பாடு செய்யப்படும்.  பிற தேவைகளை தொடர்புடைய துறைகளின் ஒத்துளைப்புடன் விரைவில் நிறைவேற்றப்படும் என்றார் மேகலா முத்து.

இதில்,  எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் எம்.வீரமுத்து, ஓணாங்குடி பள்ளி தலைமையாசிரியர் க.விஜயலெட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

புதுக்கோட்டை

ஓணாங்குடியைச் சார்ந்த 6 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 100 மாணவர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.. ஸ்மார்ட் வகுப்பறை, சுத்தமான குடிநீர், மேல்நிலைப்பள்ளி, கம்ப்யூட்டர் பயிற்சி, சத்துணவு கூடத்தில் உட்கார்ந்து சாப்பிடுவதற்கான இடம், உடற்பயிற்சி ஆசிரியர், குழந்தைகளுக்கான பூங்கா, சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதற்கான பயிற்சி, நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்வதற்கான புத்தகங்கள், குழந்தைகள் நூலகம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை தெளிவாக  வலியுறுத்தினர்.

நிகழ்வில் கிராம அறிவு மைய பணியாளர் வி.மேனகா, ஊராட்சி செயலர் ஆர்.ரெங்கநாதன் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கள அலுவலர் டி.விமலா அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் சு.காந்திமதி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top