Close
நவம்பர் 22, 2024 4:12 காலை

வடசேரிபட்டி கோவில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிபட்டி பிடாரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது.

தமிழகத்திலேயே அதிகமான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வரும் மாவட்டமான புதுக்கோட்டையில் இந்த ஆண்டும் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு வடமாடு மஞ்சுவிரட்டு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்ற முடிந்துள்ளன.இன்னும் 20 -க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழர்களின் பாரம்பரிய விழாவான ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகள்நடைபெற உள்ளது.

இந்நிலையில், புதுக்கோட்டை அருகே உள்ள வடசேரிபட்டியில் பிடாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி மிக விமரிசையாக நடைபெற்றது.இந்த போட்டியினை வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியில் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, ராமநாதபுரம், தஞ்சை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட 638 காளைகள் வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதனை 250 மாடு பிடி வீரர்கள் சுழற்சி முறையில் களமிறங்கி போட்டி போட்டுக் கொண்டு அடக்கியும் அடக்க முயன்றும் வரும் காட்சிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ரொக்க பரிசுகள், கட்டில், பீரோ, மிக்சி, கிரைண்டர், சில்வர் பாத்திரங்கள், அயன் பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை வருவாய்த்துறையினரும் காவல்துறையினரும் மேற்கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 20 காயமடைந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top