Close
நவம்பர் 21, 2024 5:49 மணி

சிவகங்கை அருகே கிராம சபைக் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு

புதுக்கோட்டை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியம், தடியமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமச்சபைக் கூட்டத்தில் பேசுகிறார், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி.

சிவகங்கை மாவட்டம்,இளையான்குடி ஊராட்சி ஒன்றியம், தடியமங்கலம்ஊராட்சியில்நடைபெற்றகிராமசபைக் கூட்டத் தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியம், தடியமங்கலம் ஊராட்சியில், தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, தடியமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.நாகஜோதி தலைமையில்  நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிரவிக்குமார் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு, ஊராட்சியில், மேற்கொண்ட பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை  கூறினார்.

பின்னர் ஆட்சியர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், அண்ணல் காந்தியடிகளின் பிறந்ததினம், சுதந்திர தினம், குடியரசு தினம், தேசிய ஊராட்சிகள் தினம், உலக தண்ணீர் தினம் மற்றும் தொழிலாளர் தினம் என ஆண்டிற்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்திட சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்ததன் அடிப்படையில், மே 1 தொழிலாளர்கள் தினமான , சிவகங்கை மாவட்டத்தில் 445 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் சிறப்பாக நடைபெறுகின்றன.

தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு, அனைவருக்கும் தொழிலாளர்கள் தின வாழ்த்துகள். கிராமசபை கூட்டங்களின் மூலம் ஊராட்சியின் வளர்ச்சிக்கும் மற்றும் புதிய திட்டங்கள் செயல்படுத்துவதற்கும், அரசின் திட்டங்கள் பயனாளிகளுக்கு வழங்குவதற்கு பயனாளிப்பட்டியல் தேர்வு செய்வதற்கும் அடிப்படையாக இருந்து வருகின்றன.

கிராம சபைக்கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் என்பது நிலையான ஒன்றாக இருக்கும். அதன்படி, மக்கள் முன்னிலையில் ஒருவருக்கொருவர் கலந்து ஆலோசித்து எதிர்க்காலத் தேவைகளை நிறைவேற்ற பேசி முடிவு செய்ய இந்தக்கூட்டம் மிகப்பயனுள்ளதாக அமையும். மேலும், ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதி கள் முன்னிலையில், கிராம வளர்ச்சிக்கு தேவை யான திட்டங்களை தேர்வு செய்து செயலாற்றப் படுவதும் இதன் நோக்கமாகும்.

இக்கிராமச்சபைக் கூட்டத்தில் ,பல்வேறு துறைகளைச் சார்ந்த முதன்மை அலுவலர்கள் தங்களின் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கின்றனர். இதனை ஊராட்சியைச் சார்ந்த பொதுமக்கள் கருத்தில் கொண்டு அரசின் திட்டங்கள் மூலம் பயன்பெறலாம். ஒரு வளமான கிராமத்தை உருவாக்குவதற்கு மக்களுடன் இணைந்து இணக்கமான முறையில் பணியாற்றி, கிராமத்தின் வளர்ச்சிக்கு தங்களை முழுயாக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றுவது ஒவ்வொரு ஊராட்சி மன்றத்தலை வரின் கடமையாகும்.

இந்த கிராமத்தைப் பொறுத்த வரையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.68.00 இலட்சம் மதிப்பீட்டிலான பணிகளும், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றிடும் பொருட்டு, வேளாண் பெருங்குடி மக்களுக்கு பயனுள்ள வகையில் வோர்வெல்கள் அமைத்துத்தரும் பணிகளும், இதுதவிர, தோட்டக்கலைத்துறையின் சார்பில் பல்வேறு பணிகளும் மேற்
கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிதியாண்டிலும் மாவட்டத்தில் 20 சதவீத ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவ்வூராட்சிகளில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2022-2023-ஆம் நிதியாண்டிற்கான ஊராட்சிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு, பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மேலும், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர்கள் அற்ற மாவட்டமாக சிவகங்கை மாவட்டத்தினை உருவாக் குவதற்கு அடிப்படையாகவும், முன்னுதாரணமாகவும் திகழும் வகையில், தடியமங்கலம் ஊராட்சி திகழ வேண்டும். குழந்தைகளின் நலனுக்காக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கான வழிகாட்டுதல்கள் அந்தந்தப் பள்ளிகளி லேயே, இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் மூலம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இதுதவிர, திறன் வளர்ப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு, சிறந்த வேலைவாய்ப்பினை பெறுவதற்குமான வாய்ப்பி னையும், ஏற்படுத்தித் தருவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு, தங்களது குழந்தைகள் இடைநில்லா கல்வியை பெறுவதற்கும், பெண் கல்வியை ஊக்குவிக்குபதற்கும் பெற்றோர்கள் உறுதுணையாக இருந்து, எதிர்காலத்தில் தங்களது குழந்தைகள் நல்லநிலையை அடைவதற்கு அடிப்படையாக இருந்திட வேண்டும்.

கிராமத்தின் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் திட்ட செயல் பாடுகள் ஆகியன குறித்து வெளிப்படைத்தன்மை யுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை இக்கிராம சபைக் கூட்டத்தின் வாயிலாக பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கென இக்கூட்டம் நடத்தப்படுகிறது.

இதில், விவாதிக்கப்படும் கூட்டப்பொருட்கள் குறித்து, பொது மக்கள் முறையாக அறிந்து கொண்டு, அதில் ஏதேனும் குறைகள் இருப்பின், அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக, கலந்து ஆலோசித்து முறை யான பணிகளை மேற்கொள்வதற்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.

மேலும், இக்கிராமப்புறங்களில் சுகாதாரத்தை பேணிக் காக்கும் பொருட்டு, நம்ம ஊர் சூப்பர் என்ற திட்டத்தின் மூலம் 48 நாட்கள் தொடர்ந்து, திடக்கழிவு மேலாண்மை ஆகியன குறித்து பல்வேறு சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளது.

குறிப்பாக, பிளாஸ்டிக் பயன்பாடற்ற ஊராட்சியாக மாற்றுவதற்கு அனைவரும் உறுதுணையாக இருந்து, தங்களின் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்து, சுகாதாரமான கிராமத்தை உருவாக்குவதற்க நாம் ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி.

அதனைத் தொடர்ந்து, எங்கள் கிராமம் எழில்மிகு கிராமம் என்ற அடிப்படையிலான உறுதிமொழி மாவட்ட ஆட்சித் தலைவர், தலைமையில், இக்கிராமசபைக் கூட்டத்தில் ஏற்கப்பட்டது.

மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர்  அறிவுறுத்தினார்.

அதன் பின்னர், நம்ம ஊர் சூப்பர் விழிப்புணர்வு வாகனத் தினை, மாவட்ட ஆட்சித்தலைவர், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் , ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் ஆ.ரா.சிவராமன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் கு.சுகிதா, இளையான்குடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சோ.முனியாண்டி, இணை இயக்குநர்கள் தனபாலன், (வேளாண்மைத்துறை).

மரு.நா.நாகநாதன் (கால்நடைப் பராமரிப்புத்துறை), துணை இயக்குநர்கள்; கு.அழகுமலை (தோட்டக்கலைத்துறை), மரு.விஜய்சந்திரன் (சுகாதாரப்பணிகள்), உதவி ஆணையர் சி.ரத்தினவேல் (கலால்), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) எஸ்.குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் க.நஜிமுன்னிசா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top