Close
ஏப்ரல் 5, 2025 11:02 மணி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் உலக பத்திரிகை சுதந்திர நாள்

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை ஒன்றியம் மஞ்சப்பேட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக பத்திரிக்கை சுதந்திர தினம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக பத்திரிகை சுதந்திர  நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் மஞ்ச பேட்டை கிராமத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக பத்திரிக்கை சுதந்திர நாள்  கடைபிடிக்கப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரச் செயலாளர் சின்ன ராஜா அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக
ஊராட்சி மன்ற தலைவவி யசோதா கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரத் தலைவர் ரகமத்துல்லா தலைமை வகித்து, உலக பத்திரிக்கை சுதந்திர நாள்  குறித்து பேசியதாவது:

பத்திரிகை மற்றும் ஊடக சுதந்திரம் என்பது மக்களின் நலனுக்கு தேவையான முன்னெடுப்புகளை சுட்டிக்காட்டவும் அரசின் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளவும் மிக முக்கியமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பத்திரிகை மற்றும் ஊடகத்தின் பயன்பாடு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
அந்த வகையில் உலக மக்களை இணைக்கின்ற மிகப் பெரிய பாலமாக பத்திரிகை மற்றும் ஊடகம் விளங்குகிறது. என்பது பத்திரிகை மற்றும் ஊடகத்தின் தனிச்சிறப்பு.

யுனெஸ்கோவின் பொது மாநாட்டின் பரிந்துரையைத் தொடர்ந்து, டிசம்பர் 1993 இல் ஐ.நா பொதுச் சபையால் உலக பத்திரிகை சுதந்திர நாள்  அறிவிக்கப்பட்டது. அப்போதிருந்து, மே 3 -ஆம் நாள் விண்ட்ஹோக் பிரகடனத்தின் ஆண்டு தினம் உலக பத்திரிகை சுதந்திர  நாளாக  உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.உலக பத்திரிகை தினம் கடைபிடிக் கப்பட்டு30 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

நாடாளுமன்றம், நீதித்துறை, நிர்வாகம், பத்திரிகைத் துறை தான் மக்களாட்சியைத் தாங்கும் நான்கு தூண்களாக விளங்குகிறது.தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட தற்போதைய சூழலில், சமூக ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சமூக ஊடகங்களின் வரவால் செய்திகள் எல்லோருக்கும், எப்போதும் என்பது சாத்தியமாகி விட்டது.உலகில் எத்தனையோ பத்திரிகைகள் உள்ளன. அதன் பெயர் மற்றும் மொழிகளில் மட்டுமே வேறுபாடு இருக்கிறது. தவிர அதன் செயல்பாட்டில் அல்ல பல்வேறு சூழல்களையும் சாமளித்து மக்களுக்கு செய்திகளை வழங்கும் பத்திரிகையாளர்களின் சமூக சேவை பாராட்டுக்குரியது என்றார் அவர்.
இந்நிகழ்வில் வானவில் மன்ற கருத்தாளர்கள் மாணவர்கள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top