Close
செப்டம்பர் 20, 2024 4:00 காலை

கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சர்வதேச ஒளி தினம் கடைப்பிடிப்பு..

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை ஒன்றிய அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற சர்வதேச ஒளி தின விழா

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சர்வதேச தேச ஒளி தினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுந்தம்பட்டியில் கடைப்பிடிப்பட்டது.

இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் கலையரசி தலைமை வகித்தார்.தன்னார்வலர் சித்ரா வரவேற்றார்.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வட்டாரத் தலைவர் ரகமதுல்லா கலந்து கொண்டு சர்வதேச தேச ஒளி தினம் குறித்து பேசியதாவது:
சர்வதேச ஒளி தினம் 1966 ஆம் ஆண்டில் லேசரின் முதல் வெற்றிகரமான செயல்பாட்டின் ஆண்டு நிறைவை குறிக்கிறது.  இது நன்கு அறியப்பட்ட இயற்பியலாளரும் பொறியாளருமான  தியோடரால் நடத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் மே 16  சர்வதேச ஒளி தினம்  அனுசரிக்கப்படுகிறது. அறிவியல் ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பதையும் நிலையான வளர்ச்சி மற்றும் அமைதியை வளர்ப்பதற்கான அதன் திறனை பயன்படுத்து வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மனித வாழ்வில் ஒளி அடிப்படையிலான தொழில்நுட்பங்கள் வகிக்கும் முக்கிய பங்கை பற்றிய விழிப்புணர்வு வழங்குவதே சர்வதேச ஒளி தின கடைபிடிப்பதற்கான நோக்கமாகும். யுனோஸ்கோவின் இலக்குகளான கல்வி, சமத்துவம் மற்றும் அமைதியை அடைய தொழில்நுட்பம் மற்றும் அறிவியலை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. நமது வாழ்வில் மட்டுமல்ல அறிவியல் கலாசாரம் மற்றும் கலைக்கல்வி மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியோரிலும் முக்கிய பங்கு வகிக்கிறது .

இன்று மருத்துவம், தகவல் தொடர்பு மற்றும் ஆற்றல் துறைகளிலும் அதன் பயன்பாட்டை மிக அடிப்படையாக கொண்டுள்ளது. ஒளி தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்கு காரணமாகும். ஒளி நமக்கு செய்யும் மற்றும் செய்யக்கூடிய அனைத்தையும் சர்வதேச நினைவூட்ட சர்வதேச ஒளி தினம் கொண்டாட படுகிறது.

ஒளியைப் பற்றிய ஆய்வு தொழில்நுட்பம் மற்றும் சிகிச்சைகளில் மருத்துவ முன்னேற்றங்களை கண்டறிய வலியுறுவது, அது உயிர் காக்கும் கண்டுபிடிப்பாக மாறியது மாற்று எரிசக்தி ஆதாரங்கள், வேக இணையம் மற்றும் பல கண்டுபிடிப்புகளில் புரட்சியை ஏற்படுத்தியது. இது ஒளி அடிப்படையிலான தொழில் நுட்பத்தின் வளர்ச்சி சாத்தியமானது என்றார் அவர்.

இந்நிகழ்வில் தன்னார்வலர்கள் உமா ,காளியம்மாள், ராஜலட்சுமி, சித்ரா, காஞ்சனா, ஷாலினி, பானுமதி, புவனேஸ்வரி, வான்மதி, முருகேஸ்வரி, செந்தமிழ் லட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top