Close
நவம்பர் 22, 2024 3:49 மணி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சர்வதேச அருங்காட்சிய தினம்

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை ஒன்றிய அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற சர்வதேச அருங்காட்சியகங்கள் தினம்

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சர்வதேச அருங்காட்சிய தினம் கடைபிடிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சர்வதேச அருங்காட்சிய தினம் வேம்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடைபிடிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் புதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ராமஜெயம் வரவேற்றார். புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சுதாகர், பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வக்கோட்டை ஒன்றிய வட்டாரத் தலைவர் ரகமதுல்லா சர்வதேச அருங்காட்சிய தினம் குறித்து பேசியதாவது:
அருங்காட்சியகங்களின் பங்கு மற்றும் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டே சர்வதேச அருங்காட்சியக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மே 18 அன்று சர்வதேச அருங்காட்சியக தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நடப்பாண்டிற்கான சர்வதேச அருங்காட்சியக தினம்கொண்டாடபடுகிறது. உலகளாவிய அளவில் சமூக வளர்ச்சியில் அருங்காட்சியகங் களின் பங்கு மற்றும் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டே சர்வதேச அருங்காட்சியக தினம் 1977 -ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

பொதுவாக அருங்காட்சியகங்கள் மனிதகுலத்தின் பாரம்பரியமாக கருதப்படுகின்றன. ஒரு நாடு மற்றும் சமூகத்தின் மரபுரிமைகளை பேணி பாதுகாத்து இளைய சமுதாயத்தினர் மற்றும் அடுத்தடுத்து வரும் சந்ததியினருக்கு அவர்கள் வாழும் சொந்த மண்ணின் சொந்த வரலாறு பற்றிய விழ்ப்புணர்வை தரும் அருங்காட்சியகங்கள் ஒரு தேசத்தின் விலை மதிக்க முடியாத சொத்துகளாக கருதப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள தனி நபர்களிடையே “கலாசார பரிமாற்றம், கலாச்சாரங்களை வளப்படுத்துதல் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு, ஒத்துழைப்பு மற்றும் அமைதி” ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான முக்கியமான வழிமுறைகள் அருங்காட்சியகங்கள் தான் என்ற கருத்தை சர்வதேச அருங்காட்சியக தினம் எப்போதும் வலியுறுத்துகிறது.

ஆண்டு தோறும் கொண்டாடப்படும் சர்வதேச அருங்காட்சி யக தினத்திதற்கான கருப்பொருள் ஒவ்வொரு ஆண்டும் இதன் ஆலோசனை குழுவால் தீர்மானிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு சர்வதேச அருங்காட்சியக தினத்தின் கருப்பொருள் “அருங்காட்சியகங்கள், நிலைத்தன்மை மற்றும் நல்வாழ்வு என்பதாகும்.

புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்கள் குறித்த செப்பேடுகள், பதப்படுத்தப்பட்ட விலங்குகள், பறவைகள், கல்வெட்டுகள், கல் சிலைகள், கனிமங்கள், மரப் படிமங்கள், உலர் தாவரங்கள்,

மூலிகைப்பொருட்கள், கூத்து கலைப்பொருட்கள், பனையோ லைகள், அருங்காட்சியக வெளியீடுகள், உலோகப் படிமங்கள், கலைப்பொருட்கள், தொல் தமிழர்கள் பயன்படுத் திய பொருட்கள், முதுமக்கள் பானைகள்,

சுடுமண் படிமங்கள், மாந்த உடல் மாதிரிகள், கல் வகைகள், தொல்லுயிரிப் படிமங்கள், கனிமங்கள் ஆகியன காட்சிப் படுத்தப்பெற்று உள்ளன. மாணவர்கள் தங்கள் பெற்றோர் களுடன் சென்று பார்த்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் ரகமத்துல்லா.

இந்நிகழ்வில், வானவில் மன்ற கருத்தாளர் தெய்வீக செல்வி, தன்னார்வலர்கள் அகிலா, கலைச்செல்வி, மணிமொழி, சரிதா, பூங்கொடி, ஜெயகுமாரி, வினோதினி, வீர முனியம்மாள், ராஜலட்சுமி ஐஸ்வர்யா, கோகிலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top