Close
நவம்பர் 22, 2024 3:54 காலை

பொற்பனைக்கோட்டையில் இன்று அகழாய்வு பணி தொடக்கம்

புதுக்கோட்டை

பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணி தொடக்கம்

தமிழ்நாடு நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்தங்கம் தென்னரசு , சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  ஆகியோர் (20.05.2023) சனிக்கிழமை காலை 09.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், பொற்பனைக்கோட்டையில், அகழாய்வுப்பணியை தொடக்கி வைக்கவுள்ளதாக புதுக்கோட்டை  தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன் தகவல் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் சங்க காலத்தைச் சேர்ந்த வட்ட வடிவிலான கோட்டை, கொத்தளம் இருந்ததற்கான கட்டுமானம் உள்ளது. மேலும், அகழிகளும் உள்ளன. இப்பகுதியில் மிகவும் பழமையான கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், களிமண் அணிகலன்கள் ஏராளம் கிடைத்த துடன், இரும்பு உருக்கு ஆலைகள் செயல்பட்ட தற்கான கட்டமைப்பும் உள்ளது.

இதையடுத்து, தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2021-ல் இந்தப் பகுதியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இப்பகுதியை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக அகழாய்வு செய்ய வேண்டும் என புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன், தலைவர் கரு.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர்.  இந்நிலையில், பொற்பனைக் கோட்டையில்  மத்திய அரசு அனுமதியுடன் முதல்கட்ட ஆய்வு நடைபெற்றது.

அதில், அகழாய்வில் பழங்காலத்தில் பயன்படுத்திய மண் கின்னங்கள், கின்னங்களின் மேல் மூடி குமிழ், பெண்கள் விளையாடிய வட்ட சில் போன்ற பல சுடுமண் பொருட்கள் கிடைத்தன.இந்நிலையில்,  பொற்பனைக்கோட்டை யில் அடுத்த அகழாய்வுபணிகள் தொடங்குகின்றன.

இதுகுறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன் கூறியது: இங்கு முக்கிய தொல்லியல் ஆய்வாளர்கள் முன்னிலையில் நவீன தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்தி அகழாய்வு செய்யப்படும். இத்தகைய அகழாய்வு மூலம் தமிழர்களின் தொன்மைகள் வெளிப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top