Close
செப்டம்பர் 20, 2024 3:49 காலை

39 போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி..

தமிழ்நாடு

தமிழக காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 39 போலீஸ் உயர் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 4 புதிய டி.ஜி.பி.க்கள் பணி நியமனம் செய்யப்பட்டுளனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்றிரவு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

ராஜீவ்குமார்- டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ள இவர் தொடர்ந்து மத்திய அரசு பணியில் நீடிப்பார்.

சந்தீப்ராய் ரத்தோர்- டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ள இவர் போலீஸ் பயிற்சி அகடமி டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அபய்குமார் சிங்- டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ள இவர் லஞ்ச ஒழிப்பு இயக்குனராக தொடர்ந்து செயல்படுவார்.

வன்னியபெருமாள்– டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ள இவர் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக தொடர்ந்து பணியாற்றுவார்.

அருண்– சிவில் சப்ளை பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யான இவர் ஆவடி புதிய போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

ஆல்பர்ட் ஜான்– சென்னை பூக்கடை துணை கமிஷனராக பணியாற்றும் இவர் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆனார்.

ஸ்ரேயா குப்தா– மாநில குற்ற ஆவணக் காப்பக சூப்பிரண்டாக உள்ள இவர் சென்னை பூக்கடை துணை கமிஷனராக பதவி ஏற்பார்.

சீனிவாசன்– நெல்லை நகர துணை கமிஷனராக (கிழக்கு) பணியில் உள்ள இவர் சென்னை நகர நிர்வாக பிரிவு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

ஹர்ஷ் சிங்– சென்னை வடக்கு போக்குவரத்து துணை கமிஷனர் பொறுப்பில் உள்ள இவர் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜவஹர்– நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியில் உள்ள இவர் ஈரோடு மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்பார்.

சசி மோகன்– ஈரோடு மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.  இவர் சென்னை கியூ பிரிவுக்கு சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

 பி.சரவணன்– காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த இவர் சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜேஷ் கண்ணன்– வேலூர் மாவட்டமாவட்ட காவல் கண்காணிப்பாளர். இவர் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

கலைச்செல்வன் – நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். இவர் மாநில குற்ற ஆவணக் காப்பக சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

மணிவண்ணன்- ஆவடி கமிஷனரகத்தில் செங்குன்றம் துணை கமிஷனராக பணியில் உள்ள இவர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.

சாய் பிரனீத்– மதுரை நகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக (தெற்கு) பணியாற்றும் இவர் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதீப்– காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் இவர் மதுரை நகர சட்டம்-ஒழுங்கு (தெற்கு) துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

ஸ்ரீதேவி– திருச்சி தெற்கு துணை கமிஷனராக பணியாற்றும் இவர் சென்னை சி.பி.சி.ஐ.டி. சைபர் பிரிவு சூப்பிரண்டாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

செல்வக்குமார்– தமிழ்நாடு கமாண்டோ பிரிவு சூப்பிரண்டான இவர் திருச்சி தெற்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

பாலகிருஷ்ணன்– திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றும் இவர் ஆவடி கமிஷனரகத்தில் செங்குன்றம் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜேந்திரன்– சென்னை அமைப்பு சார்ந்த குற்ற புலனாய்வு சூப்பிரண்டாக பணியாற்றும் இவர் சென்னை பாதுகாப்பு சி.ஐ.டி. பிரிவு (2) சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

சாமிநாதன்– சென்னை பாதுகாப்பு சி.ஐ.டி. பிரிவு (2) சூப்பிரண்டாக உள்ள இவர், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணி மாற்றம் செய்யப்பட்டார்

சேஷாங் சாய்– திருப்பூர் மாவட்டமாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியில் உள்ள இவர் விழுப்புரம் மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

அருண் பாலகோபாலன்– சென்னை சி.பி.சி.ஐ.டி. சைபர் பிரிவு சூப்பிரண்டாக பணியாற்றும் இவர் தமிழ்நாடு கமாண்டோ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எஸ்.சரவணன்– மாநில உளவுப்பிரிவு (2) சூப்பிரண்டாக பணியாற்றும் இவர் அமைப்பு சார்ந்த குற்ற புலனாய்வு பிரிவு பொறுப்பையும் கவனிப்பார்.

தீபா சத்யன்– மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறை சூப்பிரண்டாக உள்ள இவர் தமிழ்நாடு போலீஸ் அகாடமி நிர்வாக பிரிவு சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.

பாண்டியராஜன்– தமிழ்நாடு சிறப்பு காவல்படை 7-வது பட்டாலியன் கமாண்டராக பணியில் உள்ள இவர் மத்தியசென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெயந்தி– மத்தியசென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக உள்ள இவர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 7-வது பட்டாலியன் கமாண்டராக மாற்றப்பட்டுள்ளார்.

சரவணக்குமார்– மாநில உளவுப்பிரிவு தலைமையக கூடுதல் சூப்பிரண்டாக உள்ள இவர் பதவி உயர்வு பெற்றுள்ளார். லஞ்ச ஒழிப்பு பிரிவு தெற்கு சரக சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொன்கார்த்திக் குமார்– கடலூர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டாக இவர் பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை பொருளாதார குற்றப்பிரிவு வடக்கு சரக சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

வினோத் சாந்தாராம்– காஞ்சீபுரம் தலைமையக கூடுதல் சூப்பிரண்டான இவர் பதவி உயர்வு பெற்று சி.பி.சி.ஐ.டி. சிறப்பு பிரிவு (1) சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

விஜய கார்த்திக் ராஜ்– கள்ளக்குறிச்சி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டாக உள்ள இவர் பதவி உயர்வு பெற்றுள்ளார். மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறை சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

கீதாஞ்லி– கரூர் மாவட்ட ‘சைபர் கிரைம்’ கூடுதல் சூப்பிரண்டான இவர் பதவி உயர்வு பெற்று சென்னை ‘சைபர் கிரைம்’ துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காமினி- தாம்பரம் கமிஷனரகத்தில் தலைமையக கூடுதல் கமிஷனராக பணியில் உள்ள இவர் சிவில் சப்ளை சி.ஐ.டி. பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

ராதிகா– சென்னை ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி.யாக பணியாற்றும் இவர் சென்னை அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.

அன்பு– வடசென்னை கூடுதல் கமிஷனராக பணியாற்றும் இவர் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யாக பதவி ஏற்பார்.

 லோகநாதன்– சென்னை தலைமையக கூடுதல் கமிஷனராக பணியாற்றும் இவர் வடசென்னை கூடுதல் கமிஷனர் பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார்.

நஜிமுல் ஹோடா– ஆவடி கமிஷனரகத்தில் தலைமையக கூடுதல் கமிஷனராக பணியாற்றும் இவர் மாநில நலப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். மாநில நலப்பிரிவு ஐ.ஜி. சம்பத்குமார் வருகிற 31- ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்.

ரூபேஷ்குமார் மீனா– சென்னை அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக பதவி வகிக்கும் இவர் மனித உரிமை மற்றும் சமூக நீதி ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்கிறார். இந்த பொறுப்பில் உள்ள பிரபாகரன் வருகிற 31-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top