Close
செப்டம்பர் 20, 2024 1:29 காலை

கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் மீன்பிடிதளங்களில் அமைச்சர்கள் ஆய்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தை ஆய்வு செய்த அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், மெய்யநாதன் ஆகியோர்

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணம், வடக்கு அம்மாபட்டிணம் மற்றும் புதுக்குடி ஆகிய கிராமங்களில், ரூ.6 கோடி மதிப்பீட்டில், மீன் இறங்குதளங்கள் கட்டுப்பட்டு வருவதை, மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்ஆகியோர்(29.5.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணம், வடக்கு அம்மாபட்டிணம் மற்றும் புதுக்குடி ஆகிய கிராமங்களில், மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ், ரூ.6 கோடி மதிப்பீட்டில், மீன் இறங்குதளங்கள் கட்டுப்பட்டு வருவதை,  மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  ஆகியோர் இன்று (29.05.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்நிகழ்வுகள், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி  தலைமையிலும், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன்  முன்னிலையில் நடைபெற்றது.

பின்னர் புதுக்கோட்டை மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய இடங்களில் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக மீனவர்களுக்கு டிரான்ஸ்மீட்டர் வழங்குவது குறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். கடலோரப் பகுதியில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிப்பதால் நாட்டுப்படகு மீனவர் களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி விசைப்படகு மீனவர்களும், நாட்டுப் படகு மீனவர்களும் அடிக்கடி தாக்கிக் கொள்கின்றனர். இது தொடர்பாக மீன்வளத்துறை அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட துறைமுகங்களில் குவிந்துள்ள மண் திட்டுகளை அகற்றவும், துறைமுகங்களை விரிவுபடுத் தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களுக்கு டிரான்ஸ்மீட்டர் வழங்குவது தொடர்பாக இஸ்ரோவுடன் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் டிரான்ஸ் மீட்டர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆழ்கடலில் மீன்பிடித்தல் என்பது சர்வதேச எல்லைப் பிரச்னைகளைக் கொண்டது. வெளியுறவுத் துறையுடன் பேசி இதற்கான சுமுகத்  தீர்வு காணப்படும். இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இடைக்கால ஏற்பாடாக 120 மீனவர்களின் படகுகளுக்கு ரூ.1.50 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை முதல்வர் ஏற்கெனவே நிவாரணம் வழங்கியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரி வேண்டும் என்று அமைச்சர்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோரும் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, நிதி ஆதாரத்தைப் பொறுத்து கல்லூரி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
மீன்பிடித் தடைக் கால நிவாரணம் அனைத்து மீனவர்க ளுக்கும் வழங்கவும், உதவித் தொகையை உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மீன்வளத் துறை உடனுக்குடன் செய்து வருகிறது.
புதுக்கோட்டை கால்நடைப் பண்ணையில் தண்ணீர் வசதி குறைந்தது, பசுந்தீவனஉற்பத்தி குறைந்தது மற்றும் அதிகாரிகள் எண்ணிக்கை குறைந்தது போன்ற பிரச்னைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை  எடுக்கப்படும்.
ஜல்லிக்கட்டில் ஆன்லைன் பதிவை மேற்கொள்வது தொடர் பாக அரசாணை எதுவும் இல்லை. உள்ளூர் பிரச்னைகளை சமாளிக்கவே அதுபோன்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாடு முதலமைச்சர்  மீனவர்களின் நலன் காக்க எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி, புதிதாக மீன்பிடி இறங்குதளங்கள் உள்ளிட்ட மீனவர்களுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் புதுக்கோட்டை மாவட்டத்தில் 08.06.2022 அன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கோட்டைப்பட்டிணம் மற்றும் ஜெகதாப்பட்டிணம் மீன்பிடி இறங்குதளங்கள் தலா ரூ.15 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என அறிவித்தார்கள்.

அதன்படி கோட்டைப்பட்டிணம் மற்றும் ஜெகதாப்பட்டிணம் மீன்பிடி இறங்குதளங்கள் மேம்படுத்திட ரூ.30 கோடி மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு நிர்வாக அனுமதிக்காக அரசிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கோட்டைப்பட்டிணம் மீன் இறங்குதளமானது, 30 மீ X 12மீ அளவுடைய ஒரு மீன் ஏலக்கூடமும், 30மீ X 12மீ அளவுடைய ஒரு வலைபின்னும் கூடமும், 20மீ x 15மீ அளவுடைய இரண்டு மீன் உலர்தளங்களும் மற்றும் 170 மீ அளவில் சாலை வசதிகளுடன் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

வடக்கு அம்மாபட்டிணம் மீன் இறங்குதளமானது, 30மீ X12மீ அளவுடைய ஒரு மீன் ஏலக்கூடமும், 20மீ X 15மீ அளவுடைய ஒரு மீன் உலர்தளமும் மற்றும் 165 மீ அளவில் சாலை வசதிகளுடன் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் புதுக்குடி மீன் இறங்குதளமானது, 30மீ X 12மீ அளவுடைய ஒரு மீன் ஏலக்கூடமும், 20மீ X 15மீ அளவுடைய ஒரு மீன் உலர்தளமும் மற்றும் 100 மீ அளவில் சாலை வசதிகளுடன் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இத்திட்டங்கள் மூலம் சுற்றுப்புற கடலோர கிராம மீனவர்கள் மீன்களை சுகாதாரமான முறையில் கையாளவும், மீனவர்க ளின் வாழ்வாதாம் மேம்படுவதுடன் பொருளாதாரம் உயர்வு பெறும். மீனவர்கள் தங்களது வலைகளை பாதுகாப்பாக வைக்கவும் மற்றும் எளிதாக கையாளவும் உதவிகரமாக இருக்கும்.

எனவே மீனவர்கள் அனைவரும் தமிழக அரசால் செயல்படுத் தப்படும் திட்டங்களை பயன்படுத்திக்கொண்டு மீனவர்கள் அனைவரும் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என  மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்  தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, மச்சுவாடியில் அமைந்துள்ள 694 ஏக்கர் பரப்பளவுள்ள புதுக்கோட்டை கால்நடைப் பண்ணையில், அலுவலர்களுடன் மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

கால்நடைப் பண்ணையில் கால்நடைகளின் எண்ணிக்கை, பால் உற்பத்தி, பராமரிப்பு தொடர்பாக அலுவலர்களுடன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் பசுக்கள் வளர்ப்பு குறித்து மாதிரி கால்நடைப் பண்ணையினை நேரில் பார்வையிட்டார்கள். மேலும் பால் பண்ணையினை நல்ல முறையில் பராமரிக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா , மணமேல்குடி ஒன்றியக்குழுத் தலைவர் .பரணி கார்த்திகேயன், அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் (பொ)சிவக்குமார்,

மண்டல இணை இயக்குநர் (பொ) மரு.எஸ்.எஸ்.அரசு, துணை இயக்குநர்கள் (கால்நடை பராமரிப்பு) (பொ) மரு.ராமச்சந்திரன், மரு.சாமி வெங்கடேசன், மரு.ஆர்.பாபு, துணை இயக்குநர் (மீன்வளம்) ரெ.சர்மிளா, உதவி இயக்குநர் (மீன்வளம்)  சின்னகுப்பன், செயற்பொறியாளர் (மீன்வளம்) சரவணக்குமார், வட்டாட்சியர் .விஜயலெட்சுமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மு.க.ராமகிருஷ்ணன், ஊராட்சிமன்றத் தலைவர் ஆதீஸ்வரன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்;

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top