Close
செப்டம்பர் 20, 2024 4:14 காலை

தஞ்சாவூர் மாவட்டம், கீழத்தோட்டம் கிராமத்தில் மீன் இறங்கு தளங்கள் அமைக்கும் பணி: அமைச்சர் ஆய்வு

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம், கீழத்தோட்டம் கிராமத்தில் மீன் இறங்கு தளங்கள் அமைக்கும் பணியை ஆய்வு செய்த மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன் குஞ்சு உற்பத்தி நிலையம் மற்றும் மீன்பிடி இறங்கு தளத்தினை மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு த்துறை அமைச்சர் அனிதாஆர்.ராதாகிருஷ்ணன் , மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் இன்று (30.05.2023)ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர்  மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்  அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம், கரந்தை அரசு மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்தில் மீன் குஞ்சுகள் உற்பத்தி தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப் பட்டது, தொடர்ந்து ரூபாய் 8. கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கீழத்தோட்டம் கிராமத்தில் மீன் இறங்கு தளங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை குறித்தும்,ரூபாய் 10.00 கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் கிராமத்தில் மீன் இறங்கு தளத்தை மேம்படுத்தும் பணி குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

தொடர்ந்து மல்லிப்பட்டினம் கிராமத்தில் ரூபாய் 7 இலட்சம் மதிப்பீட்டில் பயன்பாட்டில் உள்ள மறு சீரமைப்பு துறைமுகத் தை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. முன்னதாக தஞ்சாவூர் மாவட்டம், ஈச்சங்கோட்டையில் உள்ள அயலின கால்நடை பெருக்கப்பண்ணையில் உறைவிந்து உற்பத்தி நிலையம் மற்றும் உயரின கால்நடை பெருக்குப்பண்ணை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டமானது விவசாயத்தை முதன்மையாக கொண்ட மாவட்டமாகும்.  தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங் களில் பரப்பளவில் எட்டாவது பெரிய மாவட்டமாகும்.

இம்மாவட்டம் 3396.57 சதுர கி.மீ பரப்பளவை கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் முக்கிய ஆறுகளான காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மற்றும் உப நதிகள் விவசாயத்திற்கு அடிப்படையாக அமைத்துள்ளன.

இம்மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை-ன் வாயிலாக உள்நாட்டு மீன்வளம், கடல் மீன்வளம் மற்றும் உவர்நீர் இறால் வளர்ப்பு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தின் கடற்கரை 45.1 கி.மீ நீளமும், 27 மீனவ கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது.

இம்மாவட்டமானது உள்நாட்டு மீன் வளர்ப்பிற்கு வாய்ப்புள்ள வளமையான மாவட்டமாகும். இம்மாவட்டமானது நுண்மீன் குஞ்சு உற்பத்தி மற்றும் மீன்குஞ்சு வளர்ப்பு ஆகியவற்றில் டெல்டா மாவட்டங்களில் முதன்மையான மாவட்டமாக விளங்குகிறது.

2022-ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே சிறந்த உள்நாட்டு மீன்வளர்ப்பு மாவட்டமாக தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தினால்  தேர்வு செய்யப்பட்டு ரூபாய் மூன்று இலட்சம் ரொக்க பரிசுஇ சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப் பட்டுள்ளது.

2022-23 ஆண்டில் உள்நாட்டு மீன் உற்பத்தி 33727 டன்கள் ஆகும். 2022-23 ஆண்டில் கடல் மீன் உற்பத்தி 38566 டன்கள் ஆகும். 2022-23 ஆண்டில் உவர்நீர் இறால் உற்பத்தி 12,429 டன்கள் ஆகும்.

தமிழக முழுவதும் உள்ள ஆறுகள்,குளங்கள் மீன் வளர்ச்சியை அதிகப்படுத்த மீன்வளத்துறை மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்து, ஆறு,குளங்களில் குஞ்சுகளை விட்டு மக்களுக்கு சத்தான உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் மீனவர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அனைத்து கோரிக்கைகளும் விரைவில் தீர்வு காணப்படும் என்றுஅமைச்சர்  அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), .கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), என் .அசோக்குமார் (பேராவூரணி),

தஞ்சாவூர் மாநகராட்சி மேயர்  சண். ராமநாதன்,தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர்  கௌதமன், மீன்பிடி துறைமுக திட்டக் கோட்டம் (நாகப்பட்டினம்)  இணை இயக்குநர் திரு.இளம் வழுதி,உதவி இயக்குநர் மணிகண்டன், செயற்பொறியாளர் சரவணகுமார், உதவிசெயற்பொறியாளர் செந்தில்குமார்,

இளநிலை பொறியாளர் மோகன்ராஜ், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர்  நர்மதா,  கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் க.தமிழ்செல்வம், மாவட்ட ஊராட்சி தலைவர் ஆர். உஷா புண்ணியமூர்த்தி, சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழுத் தலைவர் கி.முத்துமாணிக்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்எம்.இராமச்சந்திரன்மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top