Close
நவம்பர் 21, 2024 5:45 மணி

புதுக்கோட்டை அருகே நெருஞ்சிப்பட்டியில் நிகழ் ஆண்டின் கடைசி ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை அருகே நெருஞ்சிப்பட்டி கிராமத்தில்  ஸ்ரீ பாலடி கருப்பர் கோவில் திருவிழாவை முன்னிட்டு  இந்த ஆண்டின் கடைசி ஜல்லிக்கட்டு போட்டி  ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் இந்த ஆண்டு கடைசி ஜல்லிக்கட்டு போட்டியானது புதுக்கோட்டை அருகே நெருஞ்சிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ பாலடி கருப்பர் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட காளைகளும் அதே போன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300- மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர்.

வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு காளைகளை அடக்கினர் இதில் சில காளைகள் மாடுபிடி வீரர்கள் கையில் சிக்காமல் சீறிப்பாய்ந்து ஓடியது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்க பரிசுகளும் மற்றும் டேபிள், ஃபேன், மிக்ஸி, கேஸ்அடுப்பு, சைக்கிள், பிரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர். முன்னதாக, புதுக்கோட்டை வருவாய் ஆய்வாளர் செல்வி  தலைமையில் மாடு பிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு  உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top