புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 48 -ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது
கம்பன் கழகத் தலைவர் எஸ் ராமச்சந்திரன்(SR) தலைமையில் கம்பன் கழக புதுக்கோட்டை கம்பன் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
கூடுதல் செயலாளர் புதுகை சா பாரதி அனைவரையும் வரவேற்றர்.கம்பன் கழகச் செயலாளர் ரா.சம்பத்குமார் விழா ஏற்பாடுகள் பற்றி விளக்கிக் கூறினார்.
கூட்டத்தில், புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் 48 -ஆம் ஆண்டு கம்பன் பெருவிழாவை ஜூலை 14 (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஜூலை 23 (ஞாயிற்றுக்கிழமை) வரை பத்து நாட்கள் கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.
வழக்கம் போல் புதுக்கோட்டை (டவுன்ஹால்) நகர்மன்றத்தில் இவ்விழா நடத்துவது. சிறந்த தமிழ் அறிஞர்களைப் பத்து நாட்களும் அழைத்து நிகழ்ச்சிகளை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது. தினமும் மாலை 5.30 தொடங்கி 9:30 வரை விழா நிகழ்வுகளை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில், துணைத் தலைவர்கள் எம்ஆர்எம் முருகப்பன்,பேக்கரி மகராஜ் அருண் சின்னப்பா, பொருளாளர்சி கோவிந்தராஜன்,பொருளாளர் கறு. ராமசாமி, இணைச் செயலாளர்கள் காடு வெட்டியார்குமார், பேராசிரியர் வெ. முருகையன், தொழிலதிபர் ரா. கருணாகரன் ஆகியோர்.
விழா குழு உறுப்பினர்கள் அனுராதா சீனிவாசன்,பேராசிரியர் மாரியப்பன்
நிலவைப்பழனியப்பன், பேராசிரியர் ரவிச்சந்திரன், ஆசிரியர் காசி ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.