Close
நவம்பர் 22, 2024 7:35 காலை

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி புதுகை நகராட்சி சார்பில் தூய்மை உறுதி ஏற்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நகர்மன்ற தலைவர் திலகவதிசெந்தில், துணைத்தலைவர் எம். லிகாகத்அலி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற உறுதி ஏற்பு நிகழ்வு

புதுக்கோட்டை நகராட்சி சார்பில்  திங்கள்கிழமை நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும்  நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை முன்னிட்டு  தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது.

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நகராட்சித்தலைவர் திலகவதிசெந்தில் தலைமையில் துணைத்தலைவர் எம். லியாகத்அலி  முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் , நகராட்சி ஆணையர்(பொறுப்பு) டி. பாலாஜி மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள்  பாபு, மகாமுனி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள்  தூய்மை உறுதி ஏற்றுக்கொண்டனர்.

உறுதி மொழி விவரம்: என் நகரம் என் பெருமை. என் நகரத்தைத் தூய்மையாகவும். சுத்தமாகவும் வைத்திருப்பது எனது கடமையும் பொறுப்புமாகும்.

பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருப்பதே நகரத் தூய்மைக்கான முதற் காரணம் என்பதை நான் நம்புகிறேன்.

தூய்மைப் பணிகளுக்கு என்னை அர்ப்பணித்துக் கொள்ள, என் நேரத்தை ஒதுக்குவேன்.நான் பொது இடங்களில் குப்பை கொட்ட மாட்டேன் பிறரையும் குப்பை கொட்ட அனுமதிக்க மாட்டேன். குப்பையை வீட்டிலேயே பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைப்பேன். தூய்மை நகருக்கான என் முயற்சியில், நான் பங்கேற்பதுடன், என்குடும்பத்தாரையும், சுற்றத்தாரையும் முழு ஆர்வத்துடன் பங்கேற்க ஊக்குவிப் பேன்.

என்னால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் என் நகரதைத் தூய்மையாக வைக்கப் பேருதவி செய்யும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என நகர்மன்ற தலைவரும், துணைத்தலைவரும் வாசிக்க, அதனை அனைவரும் வாசித்து  உறுதி ஏற்றுக்கொண்டனர்.

புதுக்கோட்டை
தூய்மைப்பணியை தொடக்கி வைத்த நகர்மன்றத்தலைவர் மற்றும் துணைத் தலைவர்

இது குறித்து நகர்மன்றத்தலைவர் திலவதி செந்தில் கூறியதாவது:

2022-2023 ஆண்டுக்கான நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட  அறிவிப்பின்படி சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு தமிழகத்தில் உள்ளஅனைத்து நகரங்களையும் தூய்மையான நகரங்களாக மற்றும் நோக்கத்தில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் ஜூன் மாதம் 3 ஆம் நாள் 2022 ஆம் தமிழ்நாடு முதலமைச்சரால்  தொடக்கி வைக்கப்பட்டது.

தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தை செயல்படுத்தும் பொருட்டு அனைத்து மாநகராட்சிகள். நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ஒவ்வொருமாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிர தூய்மைப்பணிகள்மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் மூலம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

ஓராண்டு முடிவற்ற நிலையில் தொடர்ந்து இந்த மக்கள் இயக்கம் மேலும் சிறப்பாக செயல்பட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்து தர மக்கள் பங்களிப்புடன் 03.06.2023 சனிக்கிழமை அன்று தூய்மைப் பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

பின்வரும்முக்கியமான தலைப்புகளில் செயல்பாடுகளை வடிவமைத்து சிறப்பாக தூய்மைப் பணி மேற்கொள்ளவும் முதல்வரால் அறிவுறுத்தப்படுகிறது.

பெருமளவில் மக்கள் பங்களிப்புடன் இடங்களை சுத்தம் செய்தல் 2. குப்பையை தரம் பிரித்து கொடுப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தல்,

நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்தல், நீர் நிலைகளின் கரைப்பகுதி மற்றும் பொது இடங்களில் மரம் நடுதல்.அனுமதி இன்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள், பேனர்கள் மற்றும்

பிளக்ஸ் போர்டுகளை அப்புறப்படுத்துதல், சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை பெருமைப்படுத்துதல்.

அனுமதியின்றி கொட்டப்படும் கட்டுமான மற்றும் இடிப்பு கழிவுகளை அகற்றுதல் மற்றும் சுவரொட்டிகளை முழுமையாக அகற்றுதல். பள்ளி மற்றும் கல்லூரிகளில் தூய்மை பணி குறித்து  புதுக்கோட்டை நகராட்சி சார்பில்  விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிககள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

புதுக்கோட்டை
தூய்மைப்பணியாளருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது

இது குறித்து நகராட்சி ஆணையர்(பொறுப்பு) டி. பாலாஜி கூறியதாவது:

அனைத்து செயல்பாடுகளையும் தூய்மை உறுதி மொழியுடன் ஆரம்பித்தல் வேண்டும்.  இந்தப் பணிகளை தன்னார்வலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், சேவை நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மூலமாக விழிப்புணர்வுகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களால் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் Swachhtam portal-ல் IEC activities தலைப்பில் பதிவேற்றம் செய்யப்படு வருகிறது.

தெளிவான புகைப்படங்கள், முக்கிய விலரங்களுடன் நகர் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் tnpeoplemovement@gmaill.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து விவரங்களும் நகர்ப்புற உள்ளாட்சிகள் சமூக வலைதன் பக்கங்களிலும், MawsTamilnadu, SbmurbanTN என்ற Twitter மற்றும் Facebook பக்கங்களிலும் பதிவு செய்ய  வலியுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து நடவடிக்கைகளையும் செய்தித்தாள். உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் பிரபலப்படுத்த  நடவடிக்கை எடுத்து வருகிறோம்.  இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் பெருமளவிலான மக்கள் பங்களிப்புடன் தூய்மையான நகரங்களை உருவாக்குவதாகும். அதனை நோக்கியே அனைத்து செயல்பாடுகளும் கட்டமைக்கப்படுகிறது என்றார்.

இது குறித்து, நகர் மன்ற துணைத்தலைவர் எம். லியாகத்அலி கூறியதாவது: புதுக்கோட்டை நகராட்சியில் பிளாஸ்டிக் மாசில்லா நகராட்சியாக உருவாக்குதற்கு தமிழக அரசு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்துள்ளது.

நமது சுற்றுச்சூழலை காப்பது நம் கடமை என்ற உணர்வோடு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மாற்றுப் பொருட்களை பயன்படுத்துமாறு புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் மக்களை கேட்டுக்கொள்கிறது.

தடை செய்யப்பட்டபொருட்கள் உணவுப்பொருட்களைகட்ட உபயோகப்படுத்தப்படும் நெகிழித்தாள் உறை தெர்மக்கோல் தட்டுகள்,பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள்,பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள்,பிளாஸ்டிக் பூசப்பட்ட தேநீர் குவளைகள் தெர்மக்கோல் குவளைகள்.

உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக், பிளாஸ்டிக் பூசப்பட்ட தாள். நீர் நிரப்ப பயன்படும் பைகள், பொட்டலங்கள்,பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள்,பிளாஸ்டிக் பைகள் (எந்த அளவிலும், எந்த தடிமனாக இருப்பினும்) பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித பைகள்,பிளாஸ்டிக் கொடிகள் நெய்யாத பிளாஸ்டிக் தூக்கு பைகள், பிளாஸ்டிக் குவளைகள் ஆகிய தடைசெய்யப்பட்டுள்ள பொருள்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

இவைகளுக்கு மாற்றாக, வாழை இலைகள், தாமரை இலைகள்,  பாக்குமர இலைகள், உலோக தட்டுகள்,பீங்கான் தட்டுகள், பீங்கான் குவளைகள்,உலோக குவளைகள் உலேகா கொள்கலன்,கண்ணாடி குவளைகள், கண்ணாடி பாட்டில்கள்,

காகித சுருள்,துணி பைகள்,அலுமினிய தாள்,மண்குவளைகள் மண்பாண்டங்கள்,காகித, மர உறிஞ்சு குழாய்கள் காகிதம் / சணல் பைகள்,காகிதம் /துணி கொடிகள் ஆகியவற்றை தடை செய்யப்பட்ட பொருள்களுக்கு மாற்றாக பொது மக்கள் பயன் படுத்து வேண்டும். இதன் மூலம் பிளாஸ்டிக் மாசில்லா புதுக்கோட்டை நகராட்சியாக உருவாக்குவோம் என்றார் அவர்.

இதையொட்டி சிறப்பாக பணியாற்றிய துப்புரவு பணியாளர் களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசளிக்கப்பட்டது.

முன்னதாக நகரமைப்பு ஆய்வர் ஜெய்சங்கர் வரவேற்றார்.  நகர் மன்றத்தலைவரின் நேர்முக உதவியாளர் ஆர். குமாரவேல் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top