Close
நவம்பர் 21, 2024 11:47 மணி

அறிவியல், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் சமூகத்தின் வளர்ச்சிக்கும் பயன்பட வேண்டும்

சென்னை

சென்னைத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆய்வுக் கப்பலான சாகர் நிதியை பார்வையிட்ட மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கரண் ரிஜிஜூ. உடன் துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால்.

அறிவியல், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் சமூகத்தின் வளர்ச்சிக்கும் பயன்பட வேண்டும் என்றார் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு .

அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் அனைத்தும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் பயன்பட வேண்டும் என்று மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு  சென்னையில் தெரிவித்தார்.

உலகப் பெருங்கடல் தினத்தையொட்டி சென்னை தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

அப்போது அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசியது:  நிலத்தில் வாழும் மனிதர்களுக்கு கடல் வாழ் உயிரினங்களுடன் நேரடித் தொடர்பு உள்ளது.  அரசு மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளின் முடிவுகள் மற்றும் அதன் பயன்கள் அனைத்தும் மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

அப்போது தான் அரசு என்ன செய்கிறது என்பது மக்களுக்கு தெரியும் .  நமது நடவடிக்கைகள் நிலத்தில் வாழும் உயிரினங் களுக்கு மட்டுமல்லாமல், கடல்சார்  உயிரினங்களின் நலனையும் பாதுகாக்கும் வகையில் அமைய வேண்டும்.

கடல்சார் தொழில் நுட்பத்தில் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில்  ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் சீரிய பங்களிப்பு உள்ளது.   நமது ஆராய்ச் சிகள் அனைத்தும் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கைக் கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் .

அரசு செயல்படுத்தும் திட்டங்களின்  பயன்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் .   புவி அறிவியல் துறை மேற்கொள்ளும் நிலம், கடல், வான் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைக்க வேண்டும்.  .

ஒரு செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்படும் போது அது குறித்த தகவல்கள் அனைத்தும் எளிதில் மக்களைச் சென்ற டைவதைப் போல அன்டார்டிக் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல் போன்ற பகுதிகளிலும், கடலுக்கு அடியிலும் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளையும் மக்களைச் சென்றடைய வேண்டும்.

எதிர்காலத்தில் ஆழ்கடல் பகுதியில் மேலும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.  இதில் தேசிய கடல்சார் தொழில் நுட்பக் கழகத்தின் பங்கு முக்கியமானது.  ஆராய்ச்சியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். கண்டுபிடிப்புகள் இந்தியாவுக்கு மட்டுமின்றி, மொத்த உலகத்திற்கும் பயனுள்ளதாக அமையும்.

நாம் அனைவரும் இயற்கையை மதித்து பாதுகாக்க வேண்டியதைக் கடமையாகக் கொள்ள வேண்டும்.  இந்தியப் பெருங்கடல் பகுதி மட்டுமின்றி சுமத்ரா, ஜாவா தீவுகள் பகுதியிலும், ஆழ்கடல் ஆராய்ச்சியில் இந்திய விஞ்ஞானிகள் சிறப்பாகக் செயல்பட்டு வருகின்றனர் என்றார் அமைச்சர் கிரண் ரிஜிஜூ.

சென்னைத் துறைமுகத்தில்…  இதனையடுத்து சென்னைத் துறைமுகத்திற்கு வந்த அமைச்சர் கிரண் ரிஜிஜூ   தேசிய கடல் சார் தொழில் நுட்ப நிறுவனத்தின் ஆய்வுக் கப்பல்களான சாகர் அன்வேஷிகா, சாகர் நிதி ஆகியவற்றை பார்வையிட்டு இக்கப்பல்களின் செயல்பாடுகள், மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் சாகர்நிதி கப்பலில் கடலில் அமைச்சர் சிறிது தூரம் பயணித்தார்.  அப்போது கப்பல் தடமறியும் அமைப்பு (Ship Tracking System) செயலியையும் அவர்  தொடங்கி வைத்தார். இந்த செயலி மூலம் கடலில் பயணிக்கும் கப்பல் குறித்து அறிந்து கொள்ள முடியும்.

இந்த செயலியை தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனமே தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னைத் துறைமுகத் தி்ற்கு வந்த அமைச்சரை துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் வரவேற்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top