Close
செப்டம்பர் 19, 2024 7:19 மணி

பெண் ஆட்சியரை ஆணாதிக்க கண்ணோட்டத்துடன் அவதூறு… மாதர் சங்கம் கண்டனம்

தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த அனைத்திந்திய மாதர் சங்கத்தினர்

பெண் ஆட்சியரை ஆணாதிக்க கண்ணோட்டத்துடன்அவதூறு பரப்புவதைக் கண்டிப்பதாக  மாதர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆணாதிக்கக் கண்ணோட்டத்துடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரை அவதூறு செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவித்திருப்பது:

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலக வளாகத்தில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டுள்ளதாக சிலர் சமூக ஊடகங்களில் சில தினங்களுக்கு முன்பாக பரப்பிவிட்டனர். இதனையடுத்து சில மத அடிப்படைவாதிகள் மாவட்ட ஆட்சியர் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் சிலையை அகற்றிவிட்டதாக அவதூறு பரப்பினர்.

இதனையடுத்து சிலை அகற்றப்படவில்லை என்றும், இந்த தவறான  தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர் ஐ.சி.மெர்சி ரம்யா உரிய  விளக்கம் அளித்து விட்டார்.
ஆனாலும், சிலர் இதை அரசியல் ஆதாயம் தேடும் நோக்கிலும், மதக் கலவரத்தை தூண்டும் வகையிலும் மாவட்ட ஆட்சியர் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர். நடக்காக ஒரு சம்பவதை நடந்ததாக தொடர்ந்து வதந்தியைப் பரப்பி வரும் சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா வை மாவட்டச் செயலாளர் பி.சுசிலா, தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி, துணைத் தலைவர் டி.சலோமி ஆகியோர் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top